Tuesday, December 6, 2016

ஏற்றம் காணும் எண்ணெய் விலையால் சந்தையில் என்ன மாறலாம்?

Advt.
இந்தக் கட்டுரை தொடங்கும் முன்பு மாண்பு மிகு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் அகால மரணத்திற்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


சில விதங்களில் கருத்து மாறுபாடுகள் கொண்டிருந்தாலும் முல்லை பெரியாறு, காவிரி, ஈழம் போன்ற பிரச்சினைகளில் அவரது கடைசி காலங்களில் காட்டிய செயல் தீரமிக்க ஈடுபாடுகள் போற்றுதலுக்குரியது.வேற்றுமையில் ஒற்றுமையோடு இருக்கும் இந்திய இறையாண்மையில் எதுவுமே போராடித் தான் பெற வேண்டியுள்ளது.

அந்த சூழ்நிலையில் போராடும் குணமிக்க ஒரு போராளியை இழந்து நிற்பது தமிழர்களுக்கு ஒரு பேரிழப்பு தான்.

அவரது வெற்றிடத்தை நிரப்பும் முன் தமிழகம் அரசியல் ரீதியாக பல குழப்பங்களை சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது மறுக்க இயலாது தான். அந்த கலங்கிய குட்டை விரைவில் தெளிவடைய பிரார்த்தனை செய்வோம்!

அடுத்து, பங்குச்சந்தையை பார்த்தால்,

ஒரு விடயம் ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு, அமெரிக்க தேர்தல் போன்றவற்றால் கவனிக்க படாமல் விடு படுகிறது என்றே கருதுகிறோம்.

அது தான் சர்வதேச அளவில் உயர்ந்து கொண்டிருக்கும் கச்சா எண்ணெய் விலை உயர்வுகள்.

மூன்று ஆண்டுகள் முன்பு 100 டாலருக்கு மேல் வர்த்தகமாக்கிக் கொண்டிருந்த கச்சா எண்ணெய் ஒரு கட்டத்தில் 35 டாலருக்கு சென்றது.

சிறிது காலமாக அதே விலையில் உழன்று கொண்டிருந்த எண்ணெய் விலை தற்போது மீண்டும் உயர்ந்து 55$ க்கு அருகில் வந்து விட்டது. கிட்டத்தட்ட இருபது சதவீத அளவு உயர்ந்து விட்டது.அடுத்து கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கிடையே உற்பத்தியைக் குறைக்கும் பொருட்டு நடந்த ஒப்பந்தம் வெற்றி பெறும் சூழ்நிலை வந்துள்ளது.

இதனால் அடுத்த வருடம் கச்சா எண்ணெய் விலை மேல் உயர்ந்து 70 டாலருக்கு அருகிலும் வரும் வாய்ப்பு உள்ளது.

இது கண்டிப்பாக 80% கச்சா எண்ணெய்க்கு இறக்குமதியை சார்ந்து இருக்கும் இந்தியாவிற்கு எதிர்மறை செய்தி தான்.

அதனால் அரசின் நிதிப் பற்றாக்குறை, அந்நிய செலாவணி, ரூபாய் மதிப்பு போன்றவற்றில் எதிர்மறை தாக்கத்தை அடுத்த ஒரு வருட காலத்தில் எதிர்பார்க்கலாம்.

அதற்கு முன் எச்சரிக்கையாக பெட்ரோல் விற்பனை செய்யும் BPCL, HP போன்ற நிறுவனங்களின் பங்குகள் இருந்தால் விற்று விடுவது நல்லது.

அதே போல், கச்சா எண்ணெய் மூலப் பொருட்களை சார்ந்து இயங்கும் உரம், பெயிண்ட் போன்ற நிறுவனங்களின் பங்குகளிலும் மாற்றம் ஏறபடலாம். அதனால் இத்தகைய துறையில் கடன் குறைவாக இருக்கும் நிறுவனங்களை வைத்துக் கொள்வது நல்லது.

என்ன இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவின் நிதி நிலைமை நல்ல நிலையில் இருப்பதால் இதனை சமாளித்து விடும் என்றே தோன்றுகிறது. பெரிய அளவில் பதற்றப்பட அவசியமில்லை.

« முந்தைய கட்டுரை

முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

2 comments:

  1. PMEGP-Prime Minister’s Employment Generation Program விளக்கவும்

    ReplyDelete
  2. PMEGP-Prime Minister’s Employment Generation Program
    நகைகடை தொடங்க லோன் கிடைக்குமா எங்கு எப்படி யார் யார் வின்னப்பிக்கலாம் எவ்வளவுதொகை கடன் பெறலாம் ,???விளக்கமுடியுமா

    ReplyDelete