Monday, September 24, 2018

முதலீடு செப்டம்பர் 2018 போர்ட்போலியோ அறிவிப்பு

Advt.
நண்பர்களுக்கு,

வணக்கம்!


கடந்த சில மாதங்களாக எமது கட்டண போர்ட்போலியோ சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருந்தோம்.



இதற்கு முக்கிய காரணம்.

தொடர்ந்து எமது பதிவுகளில் சந்தையின் சரிவுகளுக்கு சாத்தியங்கள் இருப்பதாக எழுதி வந்து இருந்ததை கவனித்து இருப்பீர்கள். அது தான் காரணமும் கூட...

தேவையில்லாமல் பங்கு பரிந்துரைகளை கொடுத்து நஷ்டப்பட வைக்க வேண்டாம் என்று நினைத்து இருந்தோம்.

இந்த நிலையில் தற்போதைய சரிவுகளை பார்த்தால் Bottom Fishing என்ற நிலைமைக்கு சந்தை வந்துள்ளதாகவே தெரிகிறது.

எண்ணெய் விலை கூடி இருக்கிறது, அந்நிய செலாவணி பற்றாகுறை, GDP வளர்ச்சி குறைவு போன்றவற்றின் காரணமாக சந்தை குறைந்தால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது.

ஏற்கனவே இந்த காரணங்களால் கூட சந்தை சரிந்து இருந்தது.

ஆனால் தற்போது சில உப்பு சப்பில்லாத காரணங்களை காட்டி மேலும் சந்தை சரிவது கொஞ்சம் விந்தையாக உள்ளது.

வங்கி சாராத நிறுவனங்களின் நிதி நிலைமைகளை காரணம் காட்டி விற்பது மிக மிக தற்காலிகமான காரணமே.

சந்தையில் பயத்தில் விற்பவர்களே தற்போது அதிகம் உள்ளனர்.

இந்த நிலையில் தான் வாறன் பப்பெட் கொள்கையை பின்பற்றி நாம் உள்ளே வர வேண்டும்.

எமது இந்த தளம் ஆரம்பிக்கப்பட்ட 2013ம் வருடத்தில் ஒரு இலவச போர்ட்போலியோவை பரிந்துரை செய்து இருந்தோம். அதன் வளர்ச்சி மிகவும் அபரிதமானது.

பார்க்க: நான்கரை மடங்கு லாபம் கொடுத்த முதலீடு போர்ட்போலியோ

அதற்கு முக்கிய காரணம். அந்த சமயத்தில் இருந்த குழப்பமான சூழ்நிலையில்  Bottom Fishing வழியில் பங்குகளை பிடித்ததே.

அதே போன்றதொரு நிலை தான் தற்போது வந்துள்ளது.

உங்கள் கைகளில் பணம் இருந்து அது 2020ம் வருடத்திற்கு பிறகு கையில் வந்து சேர்ந்தால் போதும் என்று நினைத்தால் தற்போதைய நிலைமை ஒரு நல்ல வாய்ப்பு.

இந்த சரிவு சந்தையில் தொடர்ந்து நீடிக்குமா? என்ற சந்தேகங்கள் இருப்பதால் இன்னும் மூன்று தினங்களில் விரைவாக பெரிய, நடுத்தர, சிறிய நிறுவனங்கள் கலந்த எமது கட்டண போர்ட்போலியோ பரிந்துரைகளை தருகிறோம்.

இதற்கான கட்டணம், 8 பங்குகள் கொண்ட ஒரு முழு போர்ட்போலியோ 1600 ரூபாய், 4 பங்குகள் கொண்ட ஒரு மினி போர்ட்போலியோ 900 ரூபாய்.

ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தவதாக இருந்தால் முழு போர்ட்போலியோவையும், அதற்கு கீழ் முதலீடு செய்தவாக இருந்தால் மினி போர்ட்போலியோவையும் தேர்ந்தெடுக்கலாம்.

இந்த போர்ட்போலியோவின் இலக்கு என்பது நான்கு வருடங்களில் முதலீடை இரு மடங்காக மாற்றுவது. சாத்தியமான ஒன்றாகவே கருதுகிறோம்.

ஆனால் அதற்கு சில Financial Discipline கட்டாயம் தேவை.

அதனால் இந்த போர்ட்போலியோவை விரும்புவர்கள் கீழே உள்ள குறிப்புகளை கவனத்துடன் படிக்கவும்.
  • குறைந்தது இந்த போர்ட்போலியோவின் படி செய்யப்படும் முதலீடு 2020ம் வருடம் இறுதி வரை பங்குசந்தையில் இருக்க வேண்டும்.
  • அடுத்த வருடம் தேர்தல் வரவிருப்பதால் அது வரை இதே போன்ற ஏற்ற, இறக்கங்கள் கட்டாயம் இருக்கும். அதில் பதற்றமடைய கூடாது.
  • இந்த போர்ட்போலியோவானது ட்ரேடிங் செய்பவர்களுக்கு முழுக்க பொருந்தாது.
  • போர்ட்போலியோவானது இன்னும் மூன்று தினங்களில், செப்டம்பர் 27, 2018 அன்று பகிரப்படும். இன்னும் ஒரு வார இடைவெளியில் மட்டுமே மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். 

இந்த குறிப்புகளை புரிந்து கொண்டு தேவை இருப்பின் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.



Email: muthaleedu@gmail.com


« முந்தைய கட்டுரை




No comments:

Post a Comment