Tuesday, September 2, 2014

முதலீடு ஸ்கோர் கார்ட்.. திருப்தி தருகிறது

என்ன தான் கட்டணம் வாங்கி போர்ட்போலியோ சேவை கொடுத்தாலும் திருப்தி என்பது சேவையைப் பெறுபவர்களின் திருப்தியிலே அமைகிறது.

கடந்த ஒரு வாரமாக கட்டண சேவையைப் பெற்றவர்களிடமிருந்து நிறைய மின் அஞ்சல்கள் வருகின்றன.



அதாவது பல பங்குகள் இரண்டு வருடத்திற்கு நாம் எதிர்பார்ப்பதாக சொன்ன விலையை ஏற்கனவே அடைந்துள்ளன. அதில் மகிழ்ச்சி அடைந்து வரும் மெயில்களை காலையிலே பார்க்கும் போது அந்த நாளே மகிழ்வுடன் துவங்கிறது.

நாம் வாங்கி வரும் 650 என்பது பங்குச்சந்தையை பொறுத்தமட்டில் பெரிய கட்டணமாக இருக்காது என்றே நினைக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் எம்மை நம்பி முதலீடு செய்யும் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்ற முதலீட்டுத் தொகைகள் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய தொகையே.

அதாவது வீடு வாங்குதல், குழந்தைகள் திருமணம், கல்வி போன்றவற்றிற்காக சிறுக சேமித்த பணத்தில் நாம் விளையாடக் கூடாது என்பதில் தெளிவாகவே இருக்கிறோம்.

அதனால் தான் கடந்த மாதத்தில் போர்ட்போலியோ கொடுக்கவில்லை. எமது அலுவலக வேலைகள் காரணமாக பிஸியாக இருக்கும் போது ஒருமுகப்படுத்தி போர்ட்போலியோ சேவையை கொடுக்க முடியுமா? என்ற ஒரு சந்தேகம் இருந்து வந்தது.

அந்த சூழ்நிலையிலும் தனிப்பட்ட முறையில் 9 நண்பர்கள் கடந்த மாதம் எமது சேவையைப் பெற்று இருக்கிறார்கள். ஏப்ரல், ஜூன், ஜூலை போர்ட்போலியோக்களைப் போல் ஆகஸ்ட் மாத பரிந்துரைகளும் இலக்கை தொடும் என்று உறுதியாக நம்புகிறோம்.

சில புள்ளி விவரங்களை பகிர்வதால் எமது மகிழ்ச்சியையும் பகிர்கிறோம்.

  • கடந்த ஞாயிறுடன் 106 நண்பர்கள் எமது போர்ட்போலியோ சேவையில் இணைந்து உள்ளார்கள்.
  • இது வரை கட்டண சேவையில் 34 பங்குகள் பரிந்துரை செய்யப்பட்டன. அதில் 29 பங்குகள் நேர்மறையிலும், 5 பங்குகள் 10% க்கும் குறைவான எதிர்மறையிலும் சென்று கொண்டிருக்கின்றன. இதனால் நமது தேர்ச்சி சதவீதம் 83% என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
  • 34 பங்குகளில் 11 பங்குகள் ஏற்கனவே இலக்கை அடைந்து விட்டன. மொத்தமாக பார்த்தால் ஏப்ரல் போர்ட்போலியோ ஏற்கனவே இலக்கை கடந்து சென்றுள்ளது.
  • கட்டண சேவையில் இடம் பெற்ற CAIRN பரிந்துரையை வாபஸ் பெற்று உள்ளோம். அதற்கு பதிலாக மற்றொரு பங்கு இலவசமாக பரிந்துரை செய்யபப்டும்.


கீழே முழு விவரமும் அட்டவணையாக தரப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட எமக்கு இது ஸ்கோர் கார்ட் போலத் தான்.

 PORTFOLIO   Profit  Recommended  Stocks  (2 Years) Target  Achieved Stocks
 Apr, 2014  +70%  9  6
 June, 2014  +18%  9  3
 1 July, 2014  +11%  8  1
 15 July, 2014  +21%  8  1

பங்கு இலக்கை அடைந்தவர்கள் எம்மிடம் அடுத்த கட்டமாக இலவச ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

அடுத்த எமது போர்ட்போலியோ செப்டம்பர் 15 அன்று வெளியாகும். மேலும் விவரங்களுக்கு, muthaleedu@gmail.com என்ற முகவரியில் பெறலாம். இந்த இணைப்பிலும் பெறலாம்.

"Guest Blogging" என்ற பெயரில் நமது தளத்தில் எழுதலாம் என்று சொல்லி இருந்தோம். அதில் ஏற்றுமதி, இறக்குமதி, மேலாண்மை நிர்வாகம், இந்திய சமசீறர்ற பொருளாதார வளர்ச்சி தொடர்பாக எழுத சில நண்பர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளார்கள். நன்றி! 

மேலும் விருப்பம் உள்ளவர்களும் தெரிவிக்கலாம்!

English Summary:
All stock portfolio recommendations of Muthaleedu is running on positive return income with good profit.



AROUND THE WEB


முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

No comments:

Post a Comment