Monday, August 18, 2014

இரட்டிப்பாக்கி 100% லாபத்தைக் கடந்த முதலீடு போர்ட்போலியோ

நேற்று மோடியின் சுதந்திர தின உரையின் தாக்கத்தினால் சென்செக்ஸ் 280 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. அதே நேரத்தில் நாம் பரிந்துரைத்த போர்ட்போலியோ ஒரே நாளில் 3% உயர்ந்து விட்டது. மீண்டும் சந்தை ஒரு அதீத நம்பிக்கையில் காணப்படுகிறது.




இந்த தருணத்தில் நமது மாதிரி போர்ட்போலியோ ஒரு மைல் கல்லைக் கடந்துள்ளது. ஆமாம். 10 மாதங்களில் நமது போர்ட்போலியோ 105% லாபம் கொடுத்துள்ளது.

இதனை இந்த தளத்திற்கு ஒரு மகிழ்வான நிகழ்வாக கருதலாம். இங்கு  ஒவ்வொரு பங்குகளும் வெளிப்படையாகவே காரணங்களுடன் பரிந்துரை செய்யப்பட்டன. ஒரு வேளை நாம் பரிந்துரைத்த பங்குகள் எதிர் திசையில் பயணிக்க ஆரம்பித்து இருந்தால், இந்த தளத்தின் மீதான நம்பகத்தன்மை கணிசமாகக் குறைந்து இருக்கும்.

அந்த வகையில் இந்த தளம் இன்று வெற்றிகரமாக செல்வதற்கு இந்த போர்ட்போலியோவும் ஒரு முக்கிய காரணமே!

105% லாபத்தில் முதலீடு போர்ட்போலியோ
(பெரிதாக்க கிளிக் செய்ய)


சில குறிப்புகள்:

#1
இது வரை 11 பங்குகள் பரிந்துரை செய்யப்பட்டன. அதில் இரண்டு பங்குகள் சில நிகழ்வுகளினால் லாபங்களுடன் விற்கவும் பரிந்துரை செய்யப்பட்டன.

#2
இந்த போர்ட்போலியோவில் உள்ள எந்த பங்கும் எதிர்மறையில் செல்லவில்லை.

#3
தற்போது உள்ள போர்ட்போலியோவில் உள்ள 3 பங்குகள் 100%க்கும் மேல் லாபத்திலும், 4 பங்குகள் 50%க்கும் மேல் லாபத்திலும், 2 பங்குகள் 30%க்கும் மேல் லாபத்திலும் சென்று கொண்டு இருக்கின்றன.

#4
இந்த காலாண்டு நிதி அறிக்கையில் Amara Raja Batteries, Abbott India போன்ற நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் மிக நன்றாக வந்துள்ளனது. அது தான் கடந்த வாரங்களில் இந்த பங்குகளை 10%க்கும் மேல் உயர்த்தியுள்ளது.

#5
இந்த பங்குகளில் ஏற்கனவே முதலீடு செய்பவர்கள் இன்னும் வளர்ச்சியின் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் தொடரலாம். ஆனால் புதிதாக முதலீடு செய்பவர்களுக்கு இந்த பங்குகள் அதிக அளவில் உயர்ந்து விட்டதால் தற்போதைக்கு ஏற்றதல்ல.


எமது குறைந்த கட்டண சேவையில் இது வரை 97 நண்பர்கள் இணைந்த்துள்ளார்கள். பயன் பெற்ற நண்பர்களிடமிருந்து வரும் மெயில்கள் அதிக அளவில் ஊக்கத்தைக் கொடுக்கின்றன. நன்றி!

கடந்த ஒரு மாதமாக சில அலுவல்கள் காரணமாக போர்ட்போலியோ சேவையைக் கொடுக்க முடியவில்லை. தற்போது மீண்டும் ஆரம்பித்து உள்ளோம். விரும்பும் நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்!

மேலும் விவரங்களுக்கு, இணைப்பு.
மின் அஞ்சல் முகவரி: muthaleedu@gmail.com

தற்போதுள்ள சேவையில் நண்பர்கள் வசதிக்கேற்ப சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம். அதாவது நண்பர்கள் அவர்களது தேவைகளை சொன்னால், அதற்கேற்ற வகையில் பங்குகள் பரிந்துரைக்கப்படும்.

English Summary:
Revmuthal stock Portfolio recommendations crosses 100% income return in 10 months.




AROUND THE WEB


முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

No comments:

Post a Comment