Saturday, July 5, 2014

92% லாபம் கொடுத்த முதலீடு போர்ட்போலியோ

சிறு வயதில் கோடீஸ்வரர்கள் தொடர்பான செய்திகள் வரும் போது ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாமும் இப்படி ஆக மாட்டோமா? என்ற ஆசை ஏற்பட்டதுண்டு.  அது பேராசையாக இருந்தாலும் நிறைவேறும் ஒரு ஆசை தான் என்பதை தற்போது அனுபவப்பூர்மாக புரிய முடிகிறது.


ஆமாம். கடந்த பத்து மாதங்களில் எமது மாதிரி போர்ட்போலியோ 92% வருமானம் கொடுத்துள்ளது. அதே போல் ஏப்ரல் போர்ட்போலியோ 45% லாபமும், ஜூன் போர்ட்போலியோ 12% லாபமும் கொடுத்துள்ளது.

நிரூபணம் செய்து அடுத்தக் கட்டத்திற்கு செல்வது என்பது நல்ல த்ரில்லிங்காகவே உள்ளது.

எமக்கு தெரிந்து கிட்டத்தட்ட 100 நண்பர்கள் நமது பரிந்துரைகளை தொடர்கிறார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி,

இந்த உயர்வை பரிந்துரை செய்த நாமே எதிர்பார்க்காதது தான்.இந்த உயர்விற்கு எமது பரிந்துரைகள் மட்டுமே காரணம் என்றும் சொல்ல முடியாது.

நிலையான மத்திய அரசு, மோடி அலை, முன்னேறும் பொருளாதாரம், பரிந்துரை செய்த நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகள் என்று பல விடயங்கள் நமக்கு சாதகமாக அமைந்தன. அதனால் இயற்கையும் நமக்கு சாதகமாக அமைந்தது.

வெறும் மாதச்சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் ஒருவனால் தனது முதலீடுகளைப் பெருக்குவது என்பது கடினமான காரியம். தமது சேமிப்பின் ஒரு பகுதியை கொஞ்சம் ரிஸ்க் உள்ள முதலீடுகளில் இடுவது தான் ஓரளவு வசதியான தேவைகளுடன் கூடிய வாழ்க்கை வாழ்வதற்கு ஒரே வழியாக இருக்கும். இல்லாவிட்டால் பணவீக்கத்தை மட்டுமே Fixed Depositல் வருமானமாக பெற முடியும்.

"பணம் பணத்தை ஈட்டும்"என்பது பொருளாதாரத்தின் ஒரு முக்கிய கொள்கை. ஆனால் நடுத்தரவர்க்கத்தைப் பொறுத்த வரை உழைப்பு மட்டும் தான் பணத்தை தரும் என்பதில் நம்பிக்கை உடையவர்கள். இந்த வேறுபாடு தான் நம்மை கடைசி வரை அடுத்தவருக்கு மட்டுமே உழைக்கும் வகையில் மாற்றி விடுகிறது. அந்த வகையில் எமது கட்டுரைகள் நான் சார்ந்து இருக்கும் தமிழ் சமுதாயத்திற்கு ஓரளவாவது பயனாக இருக்கும் என்று நம்புகிறேன்.

எமது மாதிரி போர்ட்போலியோவின் முழு விவரங்களை கீழே உள்ள படத்தில் பெறலாம். அடுத்த போர்ட்போலியோ ஜூலை 15ல் பட்ஜெட்டை அடிப்படையாக வைத்து வெளியிடுகிறோம்.

900 ரூபாயில் 9 பங்குகளை விவரங்களுடன் பெறலாம். muthaleedu@gmail.com என்ற முகவரியில் மேலும் விவரங்களை பெறலாம்.


எமது டைனமிக் போர்ட்போலியோ தொடர்பான முழுமையான விவரங்களை இந்த இணைப்பில் பெறலாம்.
டைனமிக் போர்ட்போலியோ


92% லாபத்தில் போர்ட்போலியோ 

எமது ஏப்ரல் போர்ட்போலியோவின் சில பகுதிகள்..For reference


English Summary:
Revmuthal stock Portfolio recommendations has  given 92% income return in 10 months.



AROUND THE WEB


முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

No comments:

Post a Comment