Tuesday, July 1, 2014

ஜூலை போர்ட்போலியோ நிறைவு பெறுகிறது

இந்த மாத போர்ட்போலியோவை ஜூலை 1 அன்று வெளியிடுவதாக கூறி இருந்தோம்.

ஆனால் கடந்த வாரக் கடைசியிலே தயார் செய்து விட்டோம். நமது கையில் இருப்பதை விட பதிவு செய்த நண்பர்களிடம் இருந்தால் அவர்கள் திட்டமிட ஏதுவாக இருக்கும் என்று கருதி ஜூன் 29 அன்றே பகிர்ந்து விட்டோம்.

அவ்வாறு பகிர்ந்ததும் ஒரு வகையில் நல்லதாக போனது.

அடுத்து ஜூலை 15ல் 

ஏனென்றால், கடந்த இரண்டு நாட்களாக பங்கு சந்தை நல்ல உயர்வை கண்டுள்ளது. அதனால் நமது பரிந்துரைத்த பங்குகளும் உயர்ந்து விட்டன. நண்பர்களுக்கும் பயனாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.


நேற்றைய பதிவில் இந்த வாரம் முழுமைக்கும் அந்த போர்ட்போலியோவை பயன்படுத்தலாம் என்று கூறி இருந்தோம்.

ஆனால் தற்போது அதே போர்ட்போலியோ 2.76% உயர்வைக் கண்டு விட்டதால் ஜூலை போர்ட்போலியோவை இன்றுடன் நிறுத்தி வைக்கிறோம்.

அடுத்து, சில நண்பர்கள் ஒரு மாத இடைவெளியில் போர்ட்போலியோவை வெளியிடுவது என்பது அதிக இடைவெளியாக உள்ளது என்று கூறி இருந்தார்கள்.

அதற்கு எமது நேரம் அனுமதிக்காததாலும், நிறைய வேலைகளை எடுத்து செய்யும் போது தரம் பாதிக்கப்படுவதாலும் தற்போதைக்கு இவ்வாறே மாதந்தோறும் மட்டுமே தொடர்கிறோம்.

இந்த மாதம் மட்டும் விதி விலக்காக, பட்ஜெட் என்பது மிக முக்கிய நிகழ்வாக உள்ளது.

இதில் பல சுவாரஸ்யமான விடயங்களை எதிர் பார்க்கலாம். ஜூலை 10ல் பட்ஜெட் வந்து அடுத்து 20 நாட்கள் இடைவெளி இருக்கும் போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு விடும் என்று நினைக்கிறேன்.

அதனால் அந்த இழப்புகளைத் தவிர்ப்பதற்காக அடுத்த போர்ட்போலியோவை ஜூலை 15 அன்று வெளியிடுகிறோம். அதன் பிறகு மாதந்தோறும் வெளிவரும்.

ஜூலை 1 போர்ட்போலியோவை தவறவிட்டவர்கள் ஜூலை 15 அன்று பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிலர் மாதந்தோறும் தொடர்ச்சியாக போர்ட்போலியோவை வாங்கி வருவது நீண்ட கால நோக்கில் பரிந்துரைக்கப்படும் எமது பங்குகள் குறுகிய காலத்திற்கு பயன்படுத்தப்படுகிறதா? அல்லது மற்ற வணிக நோக்கில் வாங்கப்படுகிறதா? என்று புரியவில்லை.

அதனால், எமது போர்ட்போலியோ தவறாக பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஒரு போர்ட்போலியோவை வாங்கியவர்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு போர்ட்போலியோ கொடுப்பதில்லை என்று முடிவு செய்கிறோம்.

இது வரை இலவச போர்ட்போலியோ 80% லாபமும், ஏப்ரல் போர்ட்போலியோ 45% லாபமும், ஜூன் போர்ட்போலியோ 10% லாபமும், ஜூலை 1 போர்ட்போலியோ 2.76% லாபமும் கொடுத்துள்ளன.

எமது தொடர்பு முகவரி : muthaleedu@gmail.com

English Summary:
July portfolio is discontinued now and Next is on July 15 based on Financial Budget



AROUND THE WEB


முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

No comments:

Post a Comment