Monday, July 7, 2014

டைனமிக் போர்ட்போலியோ அறிவிப்பில் ஒரு முக்கிய மாற்றம்

எமது ஜூலை போர்ட்போலியோ நிறைவு தொடர்பான ஒரு அறிவிப்பில் ஒன்றை கூறி இருந்தோம்.(ஜூலை போர்ட்போலியோ நிறைவு பெறுகிறது)



அந்த வாக்கியம் இது தான்...

"சிலர் மாதந்தோறும் தொடர்ச்சியாக போர்ட்போலியோவை வாங்கி வருவது நீண்ட கால நோக்கில் பரிந்துரைக்கப்படும் எமது பங்குகள் குறுகிய காலத்திற்கு பயன்படுத்தப்படுகிறதா? அல்லது மற்ற வணிக நோக்கில் வாங்கப்படுகிறதா? என்று புரியவில்லை.

அதனால், எமது போர்ட்போலியோ தவறாக பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஒரு போர்ட்போலியோவை வாங்கியவர்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு போர்ட்போலியோ கொடுப்பதில்லை என்று முடிவு செய்கிறோம்."






அதற்கு எமது டைனமிக் போர்ட்போலியோவை பயன்படுத்தும் நண்பர் கார்த்திக்குமார் மகாலிங்கம் அவர்கள் தமது கருத்தை அனுப்பி இருந்தார்.

"I am a small investor and not a trader and following your pf since very first of your pf. By this time if you are implementing the below condition then it will affect the small investor like me also as we are strictly following your tips & suggestions and continuing our investment as a long term investor. Hence requesting you to rewise the below statement or find any other alternate solution for the mentioned issue. Sending as a friendly request and expecting a favourable response :-)"

அவரது கருத்து இது தான்..
தவறாக பயன்படுத்தும் ஒரு சிலருக்காக உண்மையான பயனாளிகள் பாதிக்கப்படுவது சரியல்ல என்பது.

அவரது கருத்தை நாமும் ஏற்கிறோம். இந்த நிபந்தனைகள் எதுவும் இனி கிடையாது. எம்மை நம்பி பின்பற்றுவர்களுக்கு நாம் அதிக மதிப்பு கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

எமது எண்ணமும், வாசகர்கள் எண்ணமும் பல விதங்களில் மாறுபட வாய்ப்புள்ளது. அது எமக்கு தெரியாமல் இருந்தால் மாற்றுவது கடினம்.

அதனால் இந்த தளத்தை பயன்படுத்தம் நண்பர்கள் நாம் எடுக்கும் சில முடிவுகள் பாதகமாக இருப்பின் தமது கருத்துக்களை எப்பொழுது வேண்டுமானாலும் அனுப்பலாம். அதனை வரவேற்கிறோம்.

இந்த தளம் ஒரு வழிப் பாதையில் செல்வதை விட இரு வழிப் பாதையாக செல்வதே நீண்ட கால நோக்கில் நன்றாக இருக்கும்.

நண்பர் கார்த்திக் அவர்களுக்கு மீண்டும் எமது நன்றிகள்!

இந்த சூழ்நிலையில் எமது ஒரு கருத்தையும் பதிவு செய்ய விரும்புகிறோம்.

நீண்ட கால நோக்கில் முதலீடு செய்பவர்கள் தங்கள் போர்ட்போலியோவை 10 பங்குகளுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதனால் எளிதில் தங்கள் பங்குகளை கண்காணித்துக் கொள்ளலாம். எப்பொழுதெல்லாம் பங்கு விலை குறைந்து வருகிறதோ வாங்கிப் போடுவதன் மூலம் எளிதில் சராசரி செய்து கொள்ளலாம். இது நாம் அதிகம் பரிசோதித்த முறை. நல்ல பலனையும் கொடுத்துள்ளது.

அடிக்கடி பங்குகளை மாற்றிக் கொள்வதால் நமக்கு டிமேட் சேவை தரும் புரோக்கர்களே கமிசன் காரணமாக அதிகம் பலன் பெறுவார்கள். அதற்கும் வரி கட்ட வேண்டும். நமது நேரமும் அதிக அளவில் புதிய பங்குகளைத் தேடுவதற்காக விரயமாகும். பரிந்துரைப்பவர்களுக்கும் அதிக வருமானம் கிடைக்கலாம். :)

அடுத்த எமது போர்ட்போலியோ பட்ஜெட்டை அடிப்படையாக வைத்து ஜூலை 15ல் வெளிவருகிறது. வழக்கம் போல் 9 பங்குகள் 900 ரூபாய்க்கு பரிந்துரை செய்யப்படுகிறது. கீழே உள்ள இணைப்புகளில் விவரங்களைப் பெறலாம்.

muthaleedu@gmail.com என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.



AROUND THE WEB


முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

4 comments:

  1. Sometimes it may happen same subscriber come with different mail id and take the portfolio suggestions... which may not be identified. But we should appreciate Karthik mahalingam asked his request genuinely, at the same time I am deviating with Karthik opinion, adding more stocks which will not helpful with the short span of two three months.. I have the feel that it will have lesser growth having 20 stocks instead of 10 stocks in portfolio and not easy to track..

    ReplyDelete
    Replies
    1. Thanks Prabhu for your valuable comments!

      Delete
  2. Thanks and appreciate your decision sir. As Mr.Karthik said that we r small and longterm investor having only hopes to make some money thru ur tips.

    ReplyDelete
    Replies
    1. Thanks for your appreciations sir! We will do our best service..

      Delete