Tuesday, July 22, 2014

தேவைக்கேற்ற மாற்றங்களுடன் முதலீடு போர்ட்போலியோ சேவை

சந்தை நிலவரம், நண்பர்களது வசதி மற்றும் தேவைகள், சரியான நேரம் போன்றவற்றை கருத்தில் கொண்டு எமது போர்ட்போலியோ சேவையில் மாற்றங்களை செய்துள்ளோம். இதன் முக்கிய நோக்கம் எது தேவையோ அதை மட்டும் வாங்கிக் கொள்வது.


இந்த மாற்றங்கள் நாம் இது வரை அளித்து வந்த போர்ட்போலியோ சேவைகளின் அனுபவங்களிலும், நண்பர்களது கருத்துக்கள் அடிப்படையிலும் செய்யப்பட்டுள்ளன.



1. DYNAMIC PORTFOLIO


நேரம் என்பது பங்குச்சந்தையில் ஒரு முக்கிய கருவியாக உள்ள போது ஆகஸ்ட் 1, செப்டெம்பர் 1 என்று தேதியைக் குறிப்பிட்டு அந்த நேரத்தை எம் கையில் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் இனி சந்தை சரிவுகளின் போதும், முக்கிய நிகழ்வுகளின் போதும் மட்டுமே பங்குகளை பரிந்துரை செய்ய விரும்புகிறோம். இந்த "DYNAMIC PORTFOLIO" சேவையில் 8 பங்குகள் சமநிலைப்படுத்தப்பட்டு 1200 ரூபாய்க்கு பரிந்துரை செய்யப்படும். ஆனால் ஒவ்வொரு மாதமும் வெளிவராது.

2. CUSTOMIZED PORTFOLIO (விருப்ப போர்ட்போலியோ)


எமது போர்ட்போலியாவால் பயன் பெற விரும்பும் நண்பர்களின் நேரத்திற்கும் மதிப்பு கொடுக்க வேண்டி உள்ளது. அதனால் அவர்களது வசதிக்கேற்ப ஒரு "CUSTOMIZED PORTFOLIO (விருப்ப போர்ட்போலியோ)" என்ற பெயரில் சேவையை உருவாக்குகிறோம். அதில் வசதிக்கேற்ப எப்பொழுது வேண்டுமானாலும் போர்ட்போலியோ பரிந்துரைகளை பெறலாம்.

இந்த போர்ட்போலியோ சேவையில் Bank, IT, Power, Agri, Auto, FMCG, Engineering, Infra, Oil, Pharma என்ற துறைகளில் இருந்து 8 துறைகளை தேர்வு செய்து தெரிவிக்கலாம். அவர்கள் விருப்பமான துறைகளில் மட்டும் பங்குகளை நாம் பரிந்துரை செய்வோம். இதற்கான கட்டணம் 1200 ரூபாய் மட்டும். கட்டணம் செலுத்திய தேதியில் இருந்து 7 முதல் 10 நாட்களுக்குள் போர்ட்போலியோ பகிரப்படும்.

3. MINI PORTFOLIO (மினி போர்ட்போலியோ) 


அடுத்து, எம்மிடம் வரும் நண்பர்களில் பலர் பங்குசந்தையில் தொடக்க நிலையில் உள்ளவர்கள். அதனால் அதிகபட்சம் 20,000 ~ 25,000 ரூபாய் என்ற அளவில் மட்டுமே அவர்களால் முதலீடு செய்ய முடிகிறது. அவர்களுக்கு 4 பங்குகள் வரும் அளவில் ஒரு மினி போர்ட்போலியோவை பரிந்துரை செய்யப்படும். இதற்கான கட்டணம் 650 ரூபாய் மட்டும்.

4. ONE STOCK RECOMMENDATION (ஒரு பங்கு பரிந்துரை)


ஏற்கனவே போர்ட்போலியோக்களின் இணைந்தவர்கள் லாபம் அடைந்த பங்குகளை மட்டும் மாற்றம் செய்யும் பொருட்டு 'ஒரு பங்கு' பரிந்துரைகளும் செய்யப்படும். ஒரு பங்கிற்கு 200 ரூபாய் மட்டும் கட்டணம்.


5. MUTUAL FUND RECOMMENDATION (ம்யூச்சல் பண்ட் பரிந்துரை)


ம்யூச்சல் பண்டில் பரிந்துரை செய்யுமாறு சில வேண்டுகோள்கள் வருகின்றன. அவர்களுக்காகவும் சேவை விரிவாக்கப்படுகிறது. மூன்று ம்யூச்சல் பண்ட் பரிந்துரைகளை 500 ரூபாய்க்கு பெறலாம்.

இனி இந்த தளம் சில பொருளாதார, மென்பொருள் நண்பர்களின் உதவியுடன் ஒரு சிறு அணியாக செயல்படும். அவர்கள் உதவியுடன் மேலும் சில இலவச கால்குலேட்டர்கள் www.stockcalculation.com தளத்தில் இணைக்கப்படும்.

இது வரை நான்கு போர்ட்போலியோக்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் ஏப்ரல் போர்ட்போலியோ 60% லாபத்தையும், ஜூன் போர்ட்போலியோ 12% லாபத்தையும், ஜூலை 1 போர்ட்போலியோ 1% லாபத்தையும், ஜூலை 15 போர்ட்போலியோ 8% லாபத்தையும் கொடுத்துள்ளன. இது வரை 94 நண்பர்கள் போர்ட்போலியோ சேவையில் இணைந்துள்ளார்கள்.

மேல் உள்ள சேவைகள் செப்டம்பர் முதல் தேதியில் இருந்து செயல்முறைக்கு வரும்.

இந்த மாற்றங்கள் தொடர்பாக கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

English Summary:
Revmuthal's paid service is enhanced with stock portfolio as well as mutual fund recommendations. 


AROUND THE WEB


முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

1 comment:

  1. Dear Admin,
    You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

    To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
    1. Facebook: https://www.facebook.com/namkural
    2. Google+: https://plus.google.com/113494682651685644251
    3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

    நன்றிகள் பல...
    நம் குரல்

    ReplyDelete