Sunday, June 1, 2014

போர்ட்போலியோ லாபம் 50% கடந்தது

நமது தளத்தில் பரிந்துரைக்கப்பட்ட இலவச மாதிரி போர்ட்போலியோ லாபம் இந்த வாரத்தில் 50% லாபத்தைக் கடந்தது.

அதாவது ஏழு மாதங்களில் 56% லாபம் கடந்துள்ளது.


கீழ் உள்ள படத்தில் முழு விவரங்களையும் காணலாம்.

56% லாபத்தில் போர்ட்போலியோ


இது வரை 10 பங்குகள் பரிந்துரைக்கப்பட்டன.

இதில் ASTRA, FINOLEX என்ற இரண்டு பங்குகள் 200% லாபம் கொடுத்துள்ளது. இதில் முதலீடு செய்தவர்கள் தொடருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

AEGIS, ASHAPURA என்ற இரண்டு பங்குகள் 50% அளவு லாபம் கொடுத்துள்ளன. இதில் ASHAPURA விற்குமாறு பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு பதிலாக LIBERTY SHOES என்ற பங்கு பரிந்துரைக்கப்பட்டது.

இது போக மற்ற பெரிய நிறுவன பங்குகள் 30% அளவு லாபம் கொடுத்துள்ளன.

ஆக, இறுதியில் போர்ட்போலியோ 56% லாபம் கொடுத்துள்ளது.

முதலீடு செய்த பல நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகள் வெளிவந்துள்ளன. நன்றாகவே அமைந்துள்ளது.

பல வித காரணங்களால், இந்த போர்ட்போலியோவை தொடர முடியாமல் இருக்கும் நண்பர்கள் எமது DYNAMIC PORTFOLIO சேவையையும் பயன்படுத்தலாம்.

அதுவும் இதே போல் கட்டமைப்பு கொண்ட பரிந்துரையே. ஆனால் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப பரிந்துரைக்கப்படுகிறது.

நாம் வாக்களித்தபடி, ஜூன் மாத போர்ட்போலியோ இன்று காலை நண்பர்களிடம் பகிரப்பட்டது. 

இதே போர்ட்போலியோவை ஜூன் முதல் வாரம் முழுமைக்கும் பயன்படுத்தலாம் என்பதால் தேவைப்படும் நண்பர்கள் இணைந்து கொள்ளலாம்.

ஏப்ரல் மாதத்தில் பரிந்துரைக்கப்பட்ட டைனமிக் போர்ட்போலியோ மிக நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. அதில் சில பங்குகள் இரண்டு ஆண்டு எதிர்பார்த்த விலைகளை இரண்டு மாதங்களில் அடைந்து விட்டதால் மீண்டும் சில நண்பர்கள் ஜூன் போர்ட்போலியோவில் இணைய விருப்பம் தெரிவித்து உள்ளார்கள்.  ஜூனில் அதிக பணம் கொடுத்து இணைய வேண்டிய தேவையில்லை. மாற்று வழி ஒன்றை குறைந்த கட்டணத்தில் விரைவில் பரிந்துரை செய்கிறோம்.

மேலும் விவரங்களை கீழே உள்ள இணைப்புகளில் பெறலாம்.

English Summary:
Revmuthal portfolio has given 50% profit in 8 months.



AROUND THE WEB


முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

No comments:

Post a Comment