Wednesday, June 4, 2014

ஜூன் போர்ட்போலியோ நிறைவு பெறுகிறது

ஏப்ரல் டைனமிக் போர்ட்போலியோவைத் தொடர்ந்து ஜூன் போர்ட்போலியோவிலும் நண்பர்கள் காட்டிய ஆர்வத்திற்கு நன்றி!


ஜூன் போர்ட்போலியோவின் சில பங்குகள் 4 நாட்களிலே பத்து சதவீத அளவு  உயர்ந்து விட்டதால் போர்ட்போலியோ 3% அளவு உயர்ந்து விட்டது. அதனால் இத்துடன் ஜூன் போர்ட்போலியோ சேவையை நிறைவு செய்கிறோம். 

முன்பு ஜூன் 7 வரை இந்த போர்ட்போலியோவை பயன்படுத்தலாம் என்று கூறியிருந்ததால் சில நண்பர்கள் தொடர்பு கொண்டு இருந்தார்கள். ஆனால் தற்போது ஏற்பட்ட மாற்றங்களுக்கு அவர்கள் மன்னிக்கவும்!

எமது அடுத்த போர்ட்போலியோ ஜூலை 1ல் வெளிவரும். அதற்கான சேவைக் கட்டணம் 900 ரூபாய்.  

ஏப்ரல் மாதத்தில் 24 நண்பர்களும். ஜூனில் 30 நண்பர்களும் இணைந்து உள்ளார்கள். தங்களது ஆர்வத்திற்கு நன்றி!



ஏப்ரல் மாதத்தில் பரிந்துரைத்த 2 பங்குகள் 2 மாதத்திலே எதிர்பார்க்கப்பட்ட விலைகளைத் தொட்டு விட்டதால் என்ன செய்வது என்று கேட்டு இருந்தார்கள்? அதற்காக சில பேர் ஜூன் போர்ட்போலியோவில் இணையலாமா? என்றும் கேட்டு இருந்தார்கள்.

ஒரு போர்ட்போலியோவில் 10க்கும் அதிகமாக பங்குகளை வைத்து இருந்தால் கண்காணிப்பது கடினம். அதனால் ஒவ்வொரு மாதமும் எமது போர்ட்போலியோவில் இணைந்து பங்கு எண்ணிகைகளைக் கூட்டிக் கொண்டிருப்பது தேவையற்ற செலவு.

அதற்கு பதிலாக எந்த பங்கு இலக்கு விலையை அடைந்து விட்டதோ அந்த பங்கை மட்டும் மாற்றம் செய்யலாம். அந்த ஒரு பங்கிற்கான சேவை கட்டணம் 200 ரூபாய் மட்டுமே. 

உதாரனத்திற்கு ஏப்ரல் போர்ட்போலியோவில் APAR INDUSTRIES என்ற பங்கினை 130 ரூபாயில் பரிந்துரை செய்து இருந்தோம். அதற்கான எதிர்பார்ப்பு விலை இரண்டு வருடங்களில் 195 என்று குறிப்பிட்டு இருந்தோம். ஆனால் தற்போது 218 என்ற இலக்கை அடைந்து விட்டது. 

இந்த பங்கினை விற்று விட்டு புதிய பங்கினை போர்ட்போலியோவில் சேர்க்க விரும்பும் நண்பர்கள் இந்த 'ஒரு பங்கு' சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். 1000 ரூபாய் செலவழிக்காமல் 200 ரூபாயில் முடித்துக் கொள்ளலாம்.

அடுத்து, சில நண்பர்கள் போர்ட்போலியோ விவரங்கள் எப்படி இருக்கும் என்று கேட்டு இருந்தார்கள். இதனால் ஏப்ரல் போர்ட்போலியோவின் சில பகுதிகளை மட்டும் பார்வைக்காக இந்த இணைப்பில் வைக்கிறோம்.

இது PDF வடிவத்தில் உள்ளது. அதனால் டவுன்லோடும் செய்து கொள்ளலாம்.



இது நீண்ட நாள் முதலீடுகளுக்கான பரிந்துரை. அதனால் தின வர்த்தகம் செய்யும் நண்பர்கள் இந்த சேவைகளைத தவிர்த்து விடலாம்.

இந்த சேவை தொடர்ச்சியாக வெற்றிகரமாக செல்வதற்கு எமது வாசகர்களே முக்கிய காரணம்! மிக்க நன்றி!

முந்தைய பரிந்துரைகளின் செயல்திறன்:
எமது இலவச மாதிரி போர்ட்போலியோ 56% லாபத்திலும், ஏப்ரல் போர்ட்போலியோ 28% லாபத்திலும் சென்று கொண்டு இருக்கிறது.

கீழே உள்ள இணைப்புகளில் விவரங்களை பெறலாம்.

English Summary:
June portfolio has completed due to increase in stock price.


AROUND THE WEB


முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

No comments:

Post a Comment