Friday, June 13, 2014

66% லாபம் கொடுத்த முதலீடு போர்ட்போலியோ

இந்த மாதத்தில் எமது தளம் ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவு பெறுகிறது. தமிழில் ஒரு பொருளாதாரம் தொடர்பான தகவல்களுக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியைத் தருகிறது.


இது வரை 1,70,000 முறை பக்கங்கள் பார்க்கப்பட்டுள்ளன. 2600 நண்பர்கள் இந்த தளத்தை பேஸ்புக், ட்விட்டர், மின் அஞ்சல் போன்றவற்றில் தொடர்கிறார்கள். 500க்கும் மேற்பட்ட கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன. திரும்பி பார்க்கையில் நண்பர்களின் ஆதரவில்லாமல் இருந்தால் என்றோ தளம் செயலிழக்கப்பட்டு இருக்கும். உங்கள் ஆதரவிற்கு நன்றி!



மற்றொரு மிக மகிழ்ச்சி தரும் விஷயம் என்னவென்றால், எமது தளத்தின் மூலம் பரிந்துரை செய்யப்பட பங்குகள் நல்ல வேகத்தில் உயர்ந்து வருவது.

அதாவது நமது போர்ட்போலியோ ஆகஸ்ட் 2013ல் பரிந்துரை செய்ய ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 10 மாதங்களில் 66% உயர்ந்துள்ளது. அதாவது இரண்டு லட்ச முதலீடு என்பது மூன்று லட்சத்து முப்பது மூன்று ஆயிரமாயுள்ளது.

இதே காலக் கட்டத்தில் நிப்டி 33% உயர்வைக் கொடுத்துள்ளது. ஆதலால் சராசரிக்கும் மிக அதிகமாகவே நமது போர்ட்போலியோ செயல்பட்டு வந்துள்ளது.


66% லாபத்தில் முதலீடு போர்ட்போலியோ

10 பங்குகள் பரிந்துரை செய்ததில் 5 பங்குகள் 50% அளவு லாபம் கொடுத்துள்ளன. அதில் சில பங்குகள் 200%க்கும் மேல் லாபம் கொடுத்துள்ளன.

ASTRA = Rs.35 => Rs.110 = +214%
FINOLEX = Rs.52 => Rs.162 = +211%
AEGIS = Rs.130=>Rs.217 = +67%
ASHAPURA= Rs.40=>Rs.62 = +55%
AMARA RAJA = Rs.320=>Rs.493 = +54%

இது போக, மிகக் குறைந்த கட்டணத்தில் ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்படும் டைனமிக் போர்ட்போலியோ சேவையும் ஆரம்பித்தோம். அதுவும் மிக நன்றாக சென்று கொண்டு இருக்கிறது.

ஏப்ரல் போர்ட்போலியோ  +36% லாபத்திலும், ஜூன் போர்ட்போலியோ  +8% லாபத்திலும் சென்று கொண்டிருக்கிறது.

அடுத்த போர்ட்போலியோ ஜூலை 1ல்  வெளிவருகிறது. தேவைப்படும் நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இணைந்து கொள்ளலாம்.

எமது தளத்தில் தின வர்த்தகத்திற்கான சேவையை ஆரம்பிக்க சொல்லி வேண்டுகோள்கள் வருகின்றன. ஆனால் அது எமக்கு விருப்பமில்லாத, பரிச்சயமில்லாத இடம் என்பததால் தின வர்த்தகத்தை தவிர்க்க விரும்புகிறோம்.

இதே போல் வரும் வருடங்களிலும் எமது சேவை தரத்துடன் தொடரும் என்றும் உறுதி கூறுகிறோம்.

English Summary:
Revmuthal portfolio has given 66% profit in 10 months.



AROUND THE WEB


முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

6 comments:

  1. வாழ்த்துக்கள் திரு . ராமசாமி .

    ReplyDelete
    Replies
    1. நன்றி கணேசன் அவர்களுக்கு! தங்கள் கருத்துக்கள் உற்சாகப்படுத்துகின்றன..

      Delete
  2. அன்பு நண்பரே!
    பங்குகள் பரிந்துரை மட்டுமல்லாது காலத்திற்கேற்ற கட்டுரைகள் பலவும் தங்கள் சேவையில் அடங்குவதால், தங்கள் சேவை ஒரு முழுமையான சேவையாக இருக்கிறது.
    தங்கள் சேவை மேன்மேலும் சிறக்கவும் இன்னும் பலர் பயனடையவும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பர் அவர்களுக்கு! தாங்கள் ஆரம்பம் முதல் கொடுத்து வரும் ஆதரவிற்கு நன்றி! தங்கள் வார்த்தைகள் தாம் இந்த சேவையைத் தொடர உதவுகின்றன.

      Delete
  3. தங்கள் பணி பாரட்டுக்கு உரியது
    தொடர்க
    வாழ்த்துக்கள்
    http://www.malartharu.org/2014/06/how-to-comment-in-blog.html?showComment=1402810098307#c4246387946514940657

    ReplyDelete