Wednesday, May 28, 2014

முதலீடை மூன்று மடங்காக்கிய பினோலெக்ஸ் நிறுவனம்

எமது போர்ட்போலியோவில் இணைக்கப்பட்டிருந்த சில பங்குகளின் நிதி நிலை அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன.


அதனை ஒவ்வொன்றாக பகிர்கிறோம்.

பினோலெக்ஸ் கேபிள் நிறுவனத்தை ஆறு மாதங்கள் முன்பு 52 ரூபாய்க்கு பரிந்துரை செய்து இருந்தோம்.

தற்போதைய விலை 155 ரூபாய் அருகில். அதாவது உயர்வு 200%.

பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்து இருந்தால் முப்பதாயிரம் என்று மாறி இருக்கும்.

பலன் பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

பினோலெக்ஸ் கேபிள் நிறுவனம் எலெக்ட்ரிகள் சாதனங்கள் மற்றும் பைபர் கேபிள் தயாரித்து வரும் நிறுவனம்.

தற்போது மிக நல்ல நிதி நிலை அறிக்கை கொடுத்துள்ளது.

அதன்படி, கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் வருமானம் 15% என்றும் லாபம் 51% என்றும் அதிகரித்துள்ளது.


பைபர் கேபிள் லாபத்தை கொடுக்கலாம்

காப்பர் பிரிவு கொஞ்சம் சுணக்கமாக இருந்தாலும் பைபர் கேபிள் அதனை ஈடு செய்துள்ளது. இந்த வருடம் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பைபர் கேபிள் பிரிவு மிக நன்றாக செயல்படும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

அது போக மத்திய அரசின் 200 கோடி மதிப்புள்ள டீல்களும் கிடைத்துள்ளது.

இதில் முதலீடு செய்த நண்பர்கள் ஒரு பங்கிற்கு 1.60 ரூபாய் வீதம் டிவிடென்ட் பெறலாம்.

நல்ல நிலை தொடருவதால் இந்த பங்கில் முதலீடு செய்தவர்கள் தொடருங்கள்!

அடுத்த இலக்காக 200 ரூபாய் என்று வைத்துக் கொள்ளலாம்.

வரும் ஜூன் ஒன்றாம் தேதி எமது அடுத்த DYNAMUC PORTFOLIO தர இருக்கிறோம். சேவைக் கட்டணம் 800 ரூபாய் மட்டும். எட்டு பங்குகள் பரிந்துரை செய்யப்படும்.

விரும்பும் நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

கடந்த கால போர்ட்போலியோ செயல் திறன்களை கீழே உள்ள இணைப்பில் பாருங்கள்.

English Summary:
Finolex Cables from our portfolio has given 300% returns in 8 months.





AROUND THE WEB


முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

2 comments:

  1. nalla manam vaazhga, naadu potra vaazhga!!! ramaswamy, the man who experiences happiness in others' happiness was giving free suggestions! I wait for the next portfolio announcement at the backdrop of recent change in Central Government.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர் அவர்களே!

      Delete