Monday, May 19, 2014

போர்ட்போலியோவில் 147% லாபம் கொடுத்த அஸ்ட்ரா நிறுவனம்

Advt.
அஸ்ட்ரா மைக்ரோவேவ் (ASTRA MICROWAVE) என்ற நிறுவனத்தை நமது போர்ட்போலியோவில் பரிந்துரை செய்து இருந்தோம்.


ஆறு மாதங்களுக்கு முன்பு பரிந்துரை செய்த போது 36 ரூபாயாக ஒரு பங்கு இருந்தது. தற்போது பங்கு விலை 89 ரூபாய். அதாவது 147% உயர்வு.

நமது முழு போர்ட்போலியோவை இங்கு பார்க்கலாம்.


  • 40% லாபத்தில் 'முதலீடு' இலவச பங்கு பரிந்துரைகள்


  • அஸ்ட்ரா நிறுவனம் வானவெளி ஆராய்ச்சிக்கான தேவையான எலெக்ட்ரானிக் சாதனங்களை தயாரித்து வருகிறது. ISRO, DRDO போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் தான் அஸ்ட்ராவின் நுகர்வோர்கள்.

    இரு வாரங்கள் முன் இந்த நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கை வெளிவந்தது. அதில் விற்பனை 137% என்றும், லாபம் 46% என்றும் உயர்ந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இது போக, 1500 கோடி அளவு நிறுவனத்தின் ஆர்டர் புத்தகம் நிறைந்து காணப்படுகிறது.

    இது மிக நல்ல நிதி அறிக்கையாக தெரிகிறது.

    இதனால் அடுத்த இரண்டு வருடங்கள் என்று பார்க்கையில் இன்னும் இந்த பங்கு நல்ல நிலையிலே உள்ளது.

    தற்போதைய புதிய அரசு இயல்பாகவே பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்.

    அவ்வாறு பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில் DRDO, ISRO நிறுவனங்களிடமிருந்து மேலும் அதிக ஆர்டர்கள் இந்த நிறுவனத்துக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

    L&T நிறுவனத்துடன் சேர்ந்து புதிய ஆர்டர்கள் பெற இந்த நிறுவனம் முயற்சிக்கலாம் என்று தெரிகிறது. அப்படி நடந்தால் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மேலும் சாதகமான விடயம்.

    மேலும் பாதுகாப்பில் அந்நிய முதலீடு அதிகரிக்கலாம் என்ற தகவலும் புதிய தொழில் நுட்பங்களை பெற இந்த நிறுவனத்துக்கு உதவும்.

    35லிருந்து 90க்கு ஒரு பயணம் 


    ம்யூச்சல் பண்ட் நிறுவனங்களும் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி குவித்து வருவது மேலும் பிளஸ் பாயிண்ட்.

    அதனால் இன்னமும் இந்த பங்கில் முதலீடு செய்தவர்கள் தொடரலாம் என்று நினைக்கிறோம்.

    ஒவ்வொரு மாத முதல் தேதியில் மாற்றங்களை அடிப்படையாக வைத்து 'DYNAMIC PORTFOLIO' பங்குகளை பரிந்துரை செய்து வருகிறோம். அதில் இணைய விருப்பமுள்ளவர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தமிழில் விளக்கங்களுடன் பகிரப்படும்.



    Email: muthaleedu@gmail.com


    « முந்தைய கட்டுரை




    No comments:

    Post a Comment