Friday, April 4, 2014

Dynamic Portfolio - சில கேள்வி பதில்கள்

நாம் சொல்லியவாறு நண்பர்களிடம் Dynamic Portfolioவை மார்ச் 31 அன்று பகிர்ந்து இருந்தோம். தற்போது ஒரு வாரத்தில் பரிந்துரை செய்த விலையிலிருந்து ஒன்று முதல் ஐந்து சதவீதம் மேல் கூடியுள்ளது.


இது தொடர்பான விவரங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.
REVMUTHAL DYNAMIC PORTFOLIO

முதலீட்டுப் பணம் உரிய நேரத்தில் கிடைக்கப்பெறாமை உள்ளிட்ட சில காரணங்களால் சில நண்பர்கள் உடனே முதலீடு செய்வது கடினமாக இருந்துள்ளது. இதனால் என்ன செய்வது என்பது உட்பட சில கேள்விகள் நண்பர்களிடமிருந்து வந்து இருந்தன.

இதனை ஒவ்வொருவருக்கும் மெயிலில் தனியாக எழுதுவதை விட இங்கு பகிர்கிறோம்.



இவை ஒரு பொதுப்படையான பதில்கள் என்பதால் கட்டண சேவையை பயன்படுத்தாதவர்களுக்கும் பயனாக இருக்கும்.

எல்லாம் உண்மையிலே ஆர்வமான கேள்விகள்.

கேள்வி 1:
தற்போது சந்தை புதிய உயரத்தில் உள்ளது. இந்த சமயத்தில் வாங்கலாமா?

இப்பொழுது ஒரு குறைந்த பகுதியை வாங்கலாம். அதாவது 20%-30% அளவு.

ராகுல் காந்தி சொல்வது போல் மோடி அலை அதிகமாக உள்ளது. அதனால் ஏற்பட்ட குமிழுக்கு சிறிதாவது சேதம் ஏற்படும் போது பங்குச்சந்தை இன்னும் 800 சென்செக்ஸ் புள்ளிகள் வரை கீழே செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிது.

கேள்வி 2:
பங்குச்சந்தை கீழே செல்லும் என்றால் அப்பொழுதே வாங்கலாமே?

பங்குச்சந்தை கீழே செல்லும் என்பது எதிர்பார்ப்பே.

ஒரு அரிய வாய்ப்பில் கீழே வராமல் மேலே சென்று விட்டால் நாம் இந்த வாய்ப்பையும் இழந்து விட வேண்டி இருக்கும். அதனால் தான் இப்பொழுதிருந்தே SIP முறையில் வாங்கி சராசரி பண்ணலாம்.

கேள்வி 3:
பங்குகளை SIP முறையில் வாங்கலாம் என்றால் எப்படி வாங்குவது?

20~30% தற்பொழுது உயரத்தில் இருக்கும் போது வாங்குங்கள்.
40~50% சந்தை கீழே நோக்கி வரும் போது வாங்குங்கள்.
30~40% தேர்தல் முடிவுகள் வந்த பிறகு வாங்கலாம்.

கேள்வி 4:
மொத்த முதலீட்டில் பகுதி இப்பொழுது வாங்கலாம் என்றால் பங்குகளை எப்படிப் பிரித்து வாங்குவது?

போர்ட்போலியோவில் சொன்னவாறு பல துறை பங்குகளை குறிப்பட்ட சதவீதத்திலே கடைசி வரை முதலீடு செய்யுங்கள். இதனால் ரிஸ்க் கணிசமாக குறையும்.

கேள்வி 5:
பங்குகளின் பரிந்துரைக்கப்பட்ட விலைகளை எவ்வாறு சராசரி செய்வது?

பரிந்துரைக்கப்பட்ட விலைகளில் இருந்து மேலே 5 சதவீதமும், கீழே 5 சதவீதமும் எல்லைகளாக வைத்து சராசரி செய்யலாம். இரண்டு வருடம் என்ற நீண்ட கால முதலீட்டில் தற்போதுள்ள வேறுபாடுகள் என்பது அதிகம் பாதிக்காது..
..

எமது தளத்தில் ஐந்து மாதங்கள் முன் ஒரு போர்ட்போலியோவை பரிந்துரை செய்து இருந்தோம். தற்போது லாபம் 35% வரை கொடுத்துள்ளது.

அதில் ஒரு பங்கான Finolex Cables என்ற ஒரு நிறுவனம் 100% லாபம் கொடுத்து உள்ளது. ஆனால் நாம் இன்னும் புதிதாக அந்த பங்குகளை வாங்கி கொண்டு தான் இருக்கிறோம்.

விவரங்களை இங்கு பார்க்கலாம்.
100% லாபம் கொடுத்த Finolex Cables

ஏனென்றால் நாம் எதிர்பார்க்கும் அளவு நிதி நிலை அறிக்கை வந்து கொண்டு இருக்கும் வரை அந்த நிறுவனத்தின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்பட்டே உள்ளது.

இன்னும் 150% வரையும் லாபம் எதிர்பார்க்கலாம் என்று நம்பும் போது வாங்கிப் போடுவதில் பிரச்சனை இல்லையே..

தங்கள் முதலீடு வெற்றி பெற எமது தளத்தின் சார்பில் வாழ்த்துக்கள்!


« முந்தைய கட்டுரை







முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

No comments:

Post a Comment