Sunday, April 27, 2014

இரண்டு லட்ச முதலீட்டில் 80000 லாபம் கொடுத்த போர்ட்போலியோ

நீண்ட நாட்களுக்கு பிறகு எமது போர்ட்போலியோவின் நிலையை பதிவு செய்கிறோம்.


எமது தளம் சார்பில் இரண்டு லட்சம் முதலீட்டில் ஒரு மாதிரி போர்ட்போலியோவை உருவாக்கி இருந்தோம்.

நமது போர்ட்போலியோவிலும்  மோடி அலை நல்ல வேலை செய்துள்ளது போல..

ஆமாம்..

ஐந்து மாதங்களில் மொத்தமாக 40% லாபம் கொடுத்துள்ளது. அதாவது இரண்டு லட்சம் முதலீடு எண்பதாயிரம் ரூபாயை வருமானமாக கொடுத்து உள்ளது.

முதலீட்டு அளவிற்கேற்ப வருமானமும் மேலும் அதிகரித்து இருக்கலாம்.

40% லாபத்தில் போர்ட்போலியோ 


இந்த போர்ட்போலியோவின் குறிப்பிட்டத்தக்க அம்சங்கள்:

  • எல்லா பங்குகளும் 20 சதவீதம் மேல் லாபம் கொடுத்து உள்ளன.
  • அதிகப்பட்சமாக Finolex Cables என்ற பங்கு 132% லாபம் கொடுத்து உள்ளது.
  • இது தவிர, Astra Microwave, Ashapura Minechem என்ற பங்குகள் 50 சதவீதம் மேல் லாபம் கொடுத்து உள்ளன.
  • இதில் HDFC, HCL பங்குகளின் நிதி அறிக்கை வெளிவந்துள்ளது. திருப்திகரமாக இருப்பதால் இந்த பங்குகளில் தொடரலாம்.
  • மற்ற பங்குகளின் நிதி நிலை அறிக்கைக்காக காத்து இருக்கிறோம்.


முதலீடு செய்து லாபம் கண்ட நண்பர்களுக்கு எமது வாழ்த்துக்கள்! எமக்கும் மகிழ்ச்சி!

நீண்ட கால முதலீட்டில் நிறுவனம் வளர, வளர நமது முதலீடும் அதே விகிதத்தில் வளரும் என்பதை நிரூபிக்கும் வாய்ப்பாக இது அமைந்தது.

DYNAMIC PORTFOLIO பற்றிய அறிவிப்பு:


இது போக, DYNAMIC PORTFOLIO என்ற கட்டண சேவையை ஆரம்பித்து இருந்தோம்.

ஏப்ரல் மாதத்தில் நாம் பரிந்துரைத்த போர்ட்போலியோ தற்போது 12% அளவு உயர்ந்து விட்டது.

தற்போது சந்தை மிக உச்சத்தில் சில அனுமானங்களின் அடிப்படையில் உள்ளது. மே மாத பிற்பகுதியிலே, அதாவது தேர்தல் முடிவுகள் மற்றும் நிதி நிலை அறிக்கைகள் வெளிவந்த பிறகு இந்த அனுமானங்கள் தெளிவுகளாக மாறலாம்.

அதுவரை சராசரி செய்வதைத் தவிர்த்து புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

இதனால் 24 நண்பர்கள் ஆதரவுடன் இன்று் ஏப்ரல் மாத சேவையை நிறைவு செய்கிறோம்.

எமது அடுத்த போர்ட்போலியோ ஜூன் முதல் வாரத்தில் வெளிவரும். வழக்கம் போல் கட்டணம் 800 ரூபாய் மட்டும்.

மேலும் விவரங்களை இங்கு பார்க்கலாம்.
REVMUTHAL DYNAMIC PORTFOLIO

விரும்பும் நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

இது தொடர்பாக தனிப்பதிவை எழுதுகிறோம்.



AROUND THE WEB


முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

No comments:

Post a Comment