Monday, April 7, 2014

77% லாபத்தை என்ன பண்ணலாம்?

Advt.
மோடி அலை வந்தாலும் வந்தது. எந்தவொரு நல்ல பங்கும் எளிதில் நல்ல விலையில் கிடைக்காமல் உள்ளது.


ஐந்து மாதங்கள் முன் Astra Microwave என்ற பங்கை பரிந்துரை செய்து இருந்தோம். விண்வெளி ஆராய்ச்சிக்குத் தேவையான எலெக்ட்ரானிக் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனம்.

முன்னர் இந்த இணைப்பில் பரிந்துரை செய்திருந்தோம்.

பங்கு ஒரு பார்வை: Astra Microwave

94% லாப உயர்வு சந்தித்த ASTRA MICROWAVE

நேற்று ஒரு நாள் மட்டும் 13% உயர்ந்து மொத்தமாக 77% லாபம் கொடுத்து உள்ளது. அதாவது 35 ரூபாயில் பரிந்துரைக்கப்பட்ட பங்கு தற்போது 60யைக் கடந்துள்ளது.

இதனால் லாபத்தை நினைத்து சந்தோசம் அடைவதா? அல்லது புதிதாக வாங்கும் வாய்ப்புகள் இல்லாததைக் கண்டு வருத்தப்படுவதா? என்றே குழப்பம் ஏற்பட்டு விடுகிறது.

இந்த பங்கினை என்ன செய்யலாம்? என்று முதலீடு செய்திருந்த நண்பர்கள் மின் அஞ்சல் அனுப்பிக் கேட்டு இருந்தார்கள்.



உண்மையில் சொன்னால் நாமும் இந்த பங்கில் முதலீடு செய்து காலாண்டு அறிக்கைக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம். நிதி நிலை அறிக்கையையே சந்தை நிலவரங்களைக் காட்டிலும் அதிக விவரங்களை தெளிவுப்படுத்தும்.

அதனால் தற்போது எந்த முடிவு எடுக்கவும் இயலாத சூழ்நிலை.

அரசியல் சூழ்நிலைகளால் பாதிக்கப்படாத ஒரு பங்கு இது. அதனால் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ராக்கெட் விட்டுத் தான் தீர்வார்கள்.

இவர்களுக்கும் ப்ராஜெக்ட் கிடைத்துக் கொண்டு இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஏற்கனவே 1100 கோடிக்கு ஆர்டர்கள் கையில் உள்ளது. அதனால் அடுத்த ஓரிரு வருடங்களுக்கு வியாபாரத்தில் பிரச்சனை இல்லை.

PROMOTEERS கூட தங்கள் பங்கு சதவீதத்தை கணிசமாக அதிகரித்து வருகிறார்கள். L&Tயும் இந்த நிறுவனத்தை வாங்கலாம் என்ற அவாவுடன் போட்டி போட்டு பங்குகளை வாங்கி வருகிறார்கள்.

அதனால் குறைந்தபட்சம் 100% ரிடர்ன் தரும் வரை காத்திருந்து அப்புறம் பங்கினை விற்பதனைப் பற்றி யோசிக்கலாம்.

புதிதாக இந்த பங்கில் முதலீடு செய்ய வேண்டாம். இனி multibaggers அளவு ரிடர்ன் தருமா என்பதில் தெளிவில்லை.

மேலும் இன்று நமது போர்ட்போலியோ 37% லாபத்தைக் கடந்துள்ளது. இது தொடர்பான விவரங்களை இங்கு காணலாம்.
முதலீடு போர்ட்போலியோ

புதிதாக DYNAMIC PORTFOLIO என்ற சேவையை 800 ரூபாயில் மட்டும், பல துறை சார்ந்த எட்டு பங்குகள் கொண்ட போர்ட்போலியோவை, பரிந்துரை செய்து வருகிறோம். விருப்பம் இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்!

இந்த இணைப்பில் விவரங்கள் பெறலாம்.
DYNAMIC PORTFOLIO



Email: muthaleedu@gmail.com


« முந்தைய கட்டுரை




No comments:

Post a Comment