Monday, March 31, 2014

இந்த வருடம் இந்த துறை பங்குகள் ஜொலிக்கலாம்.

பங்குச்சந்தையின் மோசமான கடந்த வருட நிலைமை மாற்றமடைந்து 2014ல் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடத்தில் சில துறைப் பங்குகள் நன்றாக இருக்கும் என்று நாம் கருதுவதை இங்குப் பகிர்கிறோம்.


சில நீண்ட நாட்களுக்கு பின் இந்த பதிவு..அதனால் சில விடயங்களை பின்னோக்கி பார்த்து விட்டு பதிவைத் தொடரலாம்.

சென்செக்ஸ் 'ஓகோ'வென்று மேலே சென்று கொண்டு இருக்கிறது. இன்று 22,350 என்ற இலக்கை அடைந்துள்ளது.

இதே நேரத்தில் நமது இலவச போர்ட்போலியோவும் தற்போது 33% லாபத்தைக் கடந்துள்ளது. அதாவது ஐந்து மாதங்களில் மூன்றில் ஒரு பங்கு லாபம்.

விவரங்களுக்கு இங்கு பார்க்க..
முதலீடு போர்ட்போலியோ

மோடி என்ற அலையை நம்பி பிஜேபியை விட பங்குச்சந்தை அதிக தூரம் சென்று விட்டதாகக் கருதுகிறோம். தற்போதைய சூழ்நிலையில் வங்கி, FMCG, மென்பொருள் பங்குகள் மட்டுமே வாங்கும் விலையில் உள்ளன. மற்றவை மதிப்பிற்கு அப்பால் உள்ளன. பார்த்து வாங்குங்கள்!

கண்டிப்பாக சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு கீழ் ஒரு திருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்பொழுது தோன்றும் பங்குகளை வாங்கிப் போடுங்கள்!

தேர்தல் முடிவுகளுக்கு முன் 60 முதல் 70% முதலீடுகளையும், அதன் பின் மீதியையும் முதலீடு செய்தால் அதிக பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கடந்த சில நாட்களாக எமது குறைந்த கட்டண சேவையான DYNAMIC PORTFOLIOவை பரிந்துரை செய்வதற்காக பல தரவுகளை சேகரித்து வந்ததால் பதிவு எழுத நேரம் இல்லாமல் இருந்தது.

இறுதியில் நேற்று விருப்பம் தெரவித்த நண்பர்களிடம் போர்ட்போலியோவைப் பகிர்ந்து கொண்டுள்ளோம். பகிர்ந்த பத்து பக்க அறிக்கை பயனாக இருக்கும் என்று நம்புகிறோம். 14 நண்பர்கள் இணைந்து உள்ளார்கள். எம்மிடம் நம்பிக்கை கொண்டு கட்டண சேவையில் இணைந்ததற்கு நன்றி!

DYNAMIC PORTFOLIOவை மேலும் விரும்பும் நண்பர்கள் இந்த இணைப்பில் விவரங்களை பெறலாம்.
DYNAMIC PORTFOLIO

DYNAMIC PORTFOLIOவிற்காக தகவல்களை சேகரிக்கும் போது நீண்ட கால நோக்கில் பல பயன் பெறும் தகவல்கள் கிடைத்தன. அதனை இந்த பதிவில் பகிர்கிறோம்.

இந்த வருஷம் சோலார்  ஸ்டார் படமும் காங்கிரஸ் ஆட்சியும்
 வராது என்று எதிர்பார்க்கப்படுவதால்
 ஸ்டாக் மார்க்கெட்டும் நல்லா .இருக்கலாம்..:)


#1
கடந்த சில ஆண்டுகளாக டெலிகாம் துறைக்கு மூலப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் இருந்தன. தற்போது அவர்களுக்கு ஒரு கிரீன் சிக்னல். 

மத்திய அரசு இரண்டரை லட்சம் கிராமங்களுக்கு பைபர் கேபிள் மூலம் பிராட் பேன்ட் சேவையை விரிவாக்க திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்த காண்டிராக்டின் மொத்த மதிப்பு 20000 கோடி. இதனை எட்டு நிறுவனங்கள் பங்கு போடவிருக்கின்றன.  இந்த நிறுவனங்கள் மீது ஒரு கண் வைத்துக் கொள்ளலாம்.

அதில் ஒன்று தான் நமது போர்ட்போலியோவில் உள்ள FINOLEX CABLES, ஏற்கனவே நமக்கு 100% லாபம் கொடுத்துள்ளது. இது தொடர்பான பதிவை இங்கு காண்க.

#2
அடுத்ததும் மத்திய அரசு தொடர்புடையது தான். கடந்த இரண்டு வருடங்களாக புதிய சாலைகளை நம் நாட்டில் பார்த்திருக்க முடியாது. அந்த அளவிற்கு அரசின் செயல்பாடு மோசமாக இருந்தது.

ஆனால் போகிற போக்கில் கொஞ்சம் நல்லது செய்து கொண்டு போகிறார்கள்.

ஆமாம்..ஒரு லட்சம் கோடிக்கு மேல் மதிப்புடைய நெடுஞ்சாலை ப்ராஜெக்ட்களை அனுமதித்து உள்ளார்கள். இதில் பயன்பெறும் நிருவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்தால் அடுத்த இரண்டு வருடங்களில் அதிக லாபம் சம்பாதிக்கலாம். ஏனென்றால் இந்த நிறுவனங்களின் பங்குகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

#3
அடுத்து, மின்சார உற்பத்தி தொடர்பானது. ஊழல் காரணமாக நிலக்கரி சுரங்கங்களை அரசு மூடியது மின் துறைக்கு பெரும் பின்னடைவாகப் போனது.

இதனால் நிலக்கரி தோண்டும் நிறுவனங்கள், மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மின் உற்பத்திக்கான சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மின் விநியோக நிறுவனங்கள் என்று ஒரு பெரிய வட்டமே கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தற்போது இந்த துறை புதிய லைசென்ஸ்கள், புதிய ப்ராஜெக்ட்கள் என்று மீண்டும் ஜொலிக்கத் துவங்கியுள்ளது. அடி மாட்டு விலைக்கு என்று சொல்லலாம். அந்த அளவிற்கு மலிவாக இந்த நிறுவன பங்குகள் கிடைக்கின்றன. வாங்கிப் போட்டால் Mutlibaggers ஆக மாற வாய்ப்புகள் உள்ளது.

#4
இந்தியாவில் கற்பழிப்புகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றொரு பிரிவிற்கு நன்மையாக மாறியுள்ளது.

ஆமாம்..

CCTV, Alarm போன்ற' எலெக்ட்ரானிக் தொடர்பான பாதுகாப்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஒளி மயமான எதிர் காலம் உள்ளது. மீடியம் பட்ஜெட் அபார்ட்மென்ட்களில் கூட இந்த சாதனங்களை பயன்படுத்தவிருக்கிறார்கள். இந்த நிறுவனங்களையும் குறி வைத்துக் கொள்ளுங்கள்!

இன்னும் நிறைய குறிப்புகள் உள்ளன. அவ்வப்போது பதிவிகளிடையே எழுதுகிறோம்.

நன்றாகப் பயன்படுத்தினால் இந்த வருடம் முதலீட்டாளர்களுக்குப் பொற்காலம் தான்! திட்டமிட்டு வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள்!


« முந்தைய கட்டுரைமுதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

No comments:

Post a Comment