Saturday, March 22, 2014

100% லாபம் கொடுத்த Finolex Cables

எமது தளத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட Finolex Cables என்ற நிறுவனம் 100% லாபம் தந்துள்ளது. அதே நேரத்தில் பரிந்துரைக்கப்பட்ட போர்ட்போலியோ தற்போது 30% லாபம் கொடுத்து உள்ளது.


சில சமயங்களில் small caps என்று சொல்லப்படும் நிறுவனங்கள் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், அதன் பங்குகள் குறைந்த விலையில் தான் வர்த்தகமாகிக் கொண்டிருக்கும். காரணம் என்ன என்று பார்த்தால் முதலீட்டாளர்கள் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு பயப்படுவார்கள்.

ஏனென்றால், பல சிறு நிறுவனங்களின் வெளிப்படையற்ற தன்மையும், நிறுவனம் தொடர்பான பழைய தகவல்கள் மற்றும் நிதி நிலை அறிக்கைகள் கிடைக்கப் பெறாமையும் முக்கியக் காரணங்கள். மேலும் நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் போது அதிகமாக ஆராய வேண்டி இருக்கும்.

ஆனாலும், நமது முழுமையான போர்ட்போலியோ ஓரளவு நல்ல லாபம் கொடுக்க வேண்டும் என்றால், இந்த நிறுவனங்களையும் வைத்துக் கொள்வது நல்லது. நமது லாபத்தை அதிகரிக்கும் ஒரு உந்து சக்தியாக இவை இருக்கும்.

52லிருந்து 104 வரை ஒரு பயணம் 
Finolex Cables என்பது எலக்ட்ரிகல் சாதனங்களுக்கு தேவையான கேபிள்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனம். இந்த பங்கு கடந்த அக்டோபர் 4 அன்று நமது தளத்தில் 52 ரூபாய்க்கு பரிந்துரைக்கப்பட்டது. இன்று பங்குகள் 104 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகின்றன. அதாவது ஆறு மாதங்களில் முதலீடு இரட்டிப்பாயாகியுள்ளது. இதனால் சில நண்பர்கள் பயனடைந்து உள்ளார்கள் என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி.

இது தொடர்பான எமது மற்ற பதிவுகளை இந்த இணைப்புகளில் பார்க்கலாம்.

பங்கு ஒரு பார்வை: Finolex Cables

அண்மையில், Fiber Optical Cables தொடர்பான அரசின் புதிய ஆர்டர்கள் இந்த நிறுவனத்துக்கு கிடைத்துள்ளன. இதன் மதிப்பு 200 கோடி ரூபாய். இன்னும் இந்த துறைக்கு இந்தியாவில் நல்ல வளர்ச்சி உள்ளது. அதனால் இன்னும் இந்த பங்கினை சிறிது காலம் வைத்து இருக்கலாம். பங்கு விலையின் அடுத்த இலக்கு 125 என்று இருக்கலாம்.

நமது முழு போர்ட்போலியோவை இங்கு பார்க்கலாம்.

பெரிதாக பார்க்க சொடுக்கவும் 

Dynamic Portfolio தொடர்பான கேள்வி பதில்கள்


நமது தளத்தில் புதிய சேவையாக இரண்டு வருடங்களில் குறைந்தபட்சம் 40% வருமானம் தருமளவு Dynamic Portfolio என்ற சேவையினை அறிவித்து இருந்தோம். இணைந்த நண்பர்களுக்கு நன்றி!

இது தொடர்பான முந்தைய பதிவு இங்கே.
Revmuthal Dynamic Portfolio

ஆனாலும் சில நண்பர்களுக்கு இது தொடர்பாக பல கேள்விகள் இருக்கின்றன. அதற்கான விளக்கங்களை இங்கு பகிர்கிறோம்.

இதற்கு சேவைக் கட்டணமாக மிகக் குறைந்த 800 ரூபாய் மட்டும் என்று சொல்லி இருந்தோம். இது தொடர்பாக தரம், கட்டணம் என்று பல கேள்விகள்..

#1 பரிந்துரைகள் எப்படி இருக்கும்?
எட்டு பங்குகள் வெவ்வேறு துறைகளில், பத்து பக்க விளக்கங்களுடன் தமிழில் பரிந்துரைக்கப்படும்.

#2 ஒரு முறை கட்டணமா? வருடக் கட்டணமா?
இது முற்றிலும் ஒரு முறைக் கட்டணம்.  பரிந்துரைக்கப்படும் பங்குகள் தொடர்பான கேள்விகளுக்கு இரண்டு வருடங்கள் பதில் அளிக்கப்படும்

#3 முதலீடு நிதியை எம்மிடம் தர வேண்டுமா?
இல்லை. இது லாபத்தை பகிர்ந்து கொள்ளும் சேவை இல்லை.

#4 சேவை எப்பொழுது ஆரம்பிக்கப்படுகிறது?
ஏப்ரல் 1 முதல் என்று நண்பர்களிடம் மின் அஞ்சலில் சொல்லி இருந்தோம். முட்டாள் தினம் என்ற செண்டிமேன்ட் இருப்பதால் மார்ச் 31 முதல் ஆரம்பிக்கப்படும்.

#5 தொடர்புக்கு
muthaleedu@gmail.com


வெளிப்படையான சேவைக்கு தங்கள் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.



AROUND THE WEB


முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

2 comments:

  1. Sir i want to join this portfolio send me the details

    ReplyDelete
  2. I have replied to your email. Pls check your email!

    ReplyDelete