Friday, February 28, 2014

27% லாபம் கொடுத்த எமது போர்ட்போலியோ

நாம் பரிந்துரைத்த பங்கு போர்ட்போலியோ இன்று வரை 27.72% லாபம் கொடுத்து உள்ளது. இது ஐந்து மாதங்களில் கிடைக்கப்பெற்ற லாபம்.


முழு விவரங்களை கீழே உள்ள படத்தில் அறியலாம்.
பெரிதாக பார்க்க சொடுக்கவும் 


நாம் பரிந்துரைத்த பங்குகளின் நடப்பாண்டு மூன்றாவது காலாண்டு அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அதனை சுருக்கமாக இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

இதில் வளர்ச்சி என்பது கடந்த வருட தொடர்புடைய காலாண்டுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.

Astra Microwave
~ வருமானம் 257% என்றும், நிகர லாபம் 76% என்றும் வளர்ச்சியடைந்துள்ளது.
~ நல்ல நிதி அறிக்கை. கையில் இன்னும் நிறைய ஆர்டர்கள் உள்ளன. அதனால் வளர்ச்சி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Amara Raja Batteries
~ வருமானம் 14% என்றும், லாபம் 19% என்றும் வளர்ச்சியடைந்துள்ளது.
~ ஆட்டோ துறையில் மற்ற பங்குகளுடன் ஒப்பிடுகையில் இது நல்ல வளர்ச்சி.
~ பங்கும் பரிந்துரைத்த விலையில் இருந்து 23% அதிகரித்துள்ளது.

HCL Technologies
~ நமக்கு 45% லாபம் கொடுத்த பங்கு.
~ வருமானம் 14% என்றும், லாபம் 39% என்றும் வளர்ச்சியடைந்துள்ளது.
~ நிறுவனம் தொடர்பாக சில வதந்திகள் உலவி வருகின்றன. அது உண்மை என்று தெரியும் பட்சத்தில் கிடைத்த லாபத்துடன் வெளியேறுவது நல்லது. அது வரை தொடரலாம்.

Ashapura Minechem
~ 5 கோடி நஷ்டத்தில் இருந்து 27 கோடி லாபம் என்பதை நோக்கி வளர்ந்துள்ளது. அடுத்த காலாண்டு அறிக்கையில் மேலும் பல விவரங்களை எதிர் பார்க்கலாம்.

HDFC Bank
~ வருமானம் 18% என்றும், லாபம் 25% என்றும் வளர்ச்சியடைந்துள்ளது.
~ வாராக்கடன்கள் நிலைமை நிலையாக உள்ளது.
~ பங்கு விலை விரைவில் 10% உயர வாய்ப்பு உள்ளது.

Finolex Cables
~ வருமானம் 5% என்றும், லாபம் 2% என்றும் வளர்ச்சியடைந்துள்ளது.
~ நான்காவது காலாண்டில் இதை விட நல்ல நிதி அறிக்கை எதிர் பார்ப்பதாக கூறியுள்ளார்கள்.
~ அரசிடமிருந்து 200 கோடி மதிப்புள்ள ஆர்டர் கிடைத்துள்ளது ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட்.

Aegis Logistics
~ வருமானம் 19% என்றும், லாபம் 18% என்றும் குறைந்துள்ளது.
~ கேஸ் பிரிவு எதிர் பார்த்த வருமானம் தரவில்லை. அடுத்த காலாண்டு அறிக்கை வரை பொறுமையாக இருக்கலாம்.

Britannia
~ வருமானம் 11% என்றும், லாபம் 63% என்றும் வளர்ச்சியடைந்துள்ளது.
~ விரைவில் பங்கு அதிக லாபம் கொடுக்கும் என்று எதிர் பார்க்கிறோம்.

Abbott
~ வருமானம் 8% என்றும், லாபம் 6% என்றும் வளர்ச்சியடைந்துள்ளது.
~ நல்ல வளர்ச்சி எதிர் பார்ப்பதால் போர்ட்போலியோவில் வைத்து இருப்போம்.

மீண்டும் மீண்டும் நண்பர்களிடம் இருந்து புதிய போர்ட்போலியோவை பரிந்துரை செய்யுமாறு வேண்டுகோள்கள் வந்துள்ளன.

நேரமின்மையே முக்கிய பிரச்சினை. அதிக நேரம் பங்கு பரிந்துரைகளுக்கு செலவிட வேண்டியுள்ளது.

அதனால் ஏற்கனவே கொடுக்கப்படும் சேவைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு ஒரு குறைந்த கட்டண சேவையை அறிமுகப்படுத்துகிறோம்.

அதன்படி 800 ரூபாய் கட்டணத்தில் "Dynamic Portfolio" பரிந்துரை செய்யலாம் என்று முடிவு செய்து உள்ளோம்.

வெவ்வேறு துறையில் உள்ள எட்டு பங்குகள் குறைந்த பட்சம் இரண்டு வருட கால முதலீட்டிற்கு பரிந்துரை செய்யப்படும். பரிந்துரைகளுடன் தேவையான விளக்கங்களும் பகிரப்படும்.

தேவைப்படும் நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

DYNAMIC PORTFOLIOவை மேலும் விரும்பும் நண்பர்கள் இந்த இணைப்பில் விவரங்களை பெறலாம்.
DYNAMIC PORTFOLIO

பிற தகவல்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.



AROUND THE WEB


முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

No comments:

Post a Comment