Tuesday, February 11, 2014

வருமான வரி சேமிக்க உதவும் ELSS fund

இந்த கட்டுரை வருமான வரியை சேமித்து, அதே நேரத்தில் அதிக ரிடர்ன் தந்து உதவும் ELSS Mutual Fund பற்றியது.

எமது சென்ற கட்டுரையில் வருமான வரி விலக்கு பெரும் வழிகளைப் பற்றிப் பார்த்தோம். அதில் ஒரு பகுதியில் ELSS Mutual Fund பற்றி குறிப்பிட்டு இருந்தோம். நண்பர்கள் அதனைப் பற்றி விளக்கமாகக் கூறுமாறு கேட்டு இருந்தார்கள். அதன் தொடர்ச்சியே இந்தப் பதிவு.

சென்ற கட்டுரையை இங்கு பார்க்கலாம்.

வருமான வரியில் 80C என்ற பிரிவின் கீழ் சில முதலீட்டுப் பிரிவுகளுக்கு ஒரு லட்சம் வரை அதிக பட்சமாக வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதில் ELSS என்று சொல்லப்படும் Tax Saving Mutual Fund என்பதும் உள்ளடக்கம்.


ELSS என்பதன் விரிவாக்கம் Equity Linked Savings Scheme. இதுவும் ம்யூச்சல் பண்ட்டின் ஒரு பிரிவே.

ம்யூச்சல் பண்ட் பற்றி அறிமுகமில்லாதவர்கள் இதற்கு முன் நாம் எழுதிய ம்யூச்சல் பண்ட் தொடரினைப் பார்க்கவும்.

இதற்கான இணைப்பு இங்கே.
ம்யூச்சல் பண்ட் தொடர்

ELSSன் ஒரு பகுதி பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் இந்த முதலீடு பங்குச்சந்தையின் ஏற்ற, இறக்கங்களுக்கு உட்பட்டது.

அதே நேரத்தில் மற்ற முதலீடுகளைக் காட்டிலும் அதிக வருமானம் கொடுக்க வல்லது.

இந்த நிதியின் கட்டாய முதலீட்டுக் காலம் மூன்று ஆண்டுகள். இதில் கிடைக்கப்படும் ஈவுத் தொகையும் (Dividend) வருமான வரி விலக்கு பலனைப் பெறுகிறது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தமாக பெரிதான தொகை எதிர் பார்ப்பவர்கள் DIVIDENDக்குப் பதிலாக GROWTH என்ற முறையைத் தேர்ந்தெடுங்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ELSS நிதிகள் சராசரியாக ஏழு சதவீத ரிடர்ன் அளித்து உள்ளன.

அதே நேரத்தில் நன்கு திறனாக செயல்பட்ட நிதிகள் 13.5% அளவும் பலன் தந்துள்ளன. இதனால் நிதியை தேர்ந்தெடுக்கும் போது நிதானமாக ஆராய்ந்து தேர்ந்தெடுக்கவும்.

மூன்று வருடங்களுக்கு இந்த நிதிகள் லாக் செய்யப்படுவதால் நிதி மேலாளர்களுக்கு போதுமான கால அவகாசம் கிடைக்கிறது. அதனால் அவர்களால் RISK மற்றும் RETURN என்ற இரண்டு Rகளையும் எளிதில் சமநிலைப்படுத்த முடிகிறது.

சிறிது RISK பயம் இல்லாதவர்கள் இந்த முதலீட்டைத் தேர்ந்தெடுக்கலாம்.

மற்ற ம்யூச்சல் பண்ட்களைப் போலவே வங்கிகளிலும், டிமேட் கணக்குகள் மூலமும் ELSS நிதிகளை வாங்கலாம்.

English Summary:
Mutual fund investment also helps to get income tax benefit. These funds are categorized under Equity Linked Savings scheme having 3 years lock-in-period.


AROUND THE WEB


முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

2 comments:

  1. GROWTH என்ற முறை நல்லது என்று நண்பரும் சொன்னார்... விளக்கத்திற்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!

      Delete