Friday, October 25, 2013

உங்கள் Gas பணம் உங்களுக்கு வந்து சேர...

இந்த மாதத்தில் இருந்து GAS சிலிண்டருக்கான மானியம் நமது வங்கி கணக்கில் நேரடியாக தரப்படுகிறது. அதனால் இனி அணைத்து சிலிண்டர்களுக்கும் ஒரே விலை தான்.

இது ஒரு வகையில் நல்ல திட்டம் தான். கள்ளசந்தையில் மானியங்கள் தவறாக பயன்படுத்துவது தவிர்க்கப்படும். இருந்தாலும் ஆதார் அட்டை அனைவரும் பெறாததால் இன்னும் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு பல சவால்கள் உள்ளன.


இணையத்தில் பல வழிகளில் கிடைத்த தகவல்களை இங்கு தொகுத்து இருக்கிறோம். உங்கள் Gas மானியத்தைப் பெறுவதற்கு இந்த வழிமுறைகள் பயனாக இருக்கும் என்று நம்புகிறோம்.ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயுவிற்கு பெட்ரோலிய நிறுவனங்கள் விதித்துள்ள விலை (சென்னையில்) 930 ரூபாய். அதை இப்போது நாம் 398 ரூபாய் செலுத்தி வாங்கி வருகிறோம். துண்டு விழும் 532 ரூபாயை அரசு, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மானியமாக அளித்து வருகிறது.

ஆனால் வரவிருக்கும் அக்டோபர் மாதத்திலிருந்து நீங்கள் விற்பனையாளரிடம் முழுத் தொகையையும் கொடுத்து தான் சிலிண்டரை வாங்க வேண்டும்.

இதுவரை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம் இனி நேரடியாக உங்களிடமே கொடுக்கப்படும். ஆனால் அது உங்கள் கையில் பணமாக கொடுக்கப்படாது. உங்கள் வங்கிக் கணக்கில் மட்டுமே சேர்க்கப்படும்

அதைப் பெற இரண்டு விஷயங்கள் முக்கியமாகத் தேவை. 
1. ஆதார் எண்.
2. வங்கிக் கணக்கு.

மானியத்தைப் பெற முதலில் உங்களுக்கு ஆதார் எண் இருக்க வேண்டும். இதுவரை ஆதார் எண்ணிற்கு நீங்கள் விண்ணப்பிக்கவிலலை என்றால் வட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தையோ,அருகிலுள்ள ஆதார் பதிவு மையங்களையோ தொடர்பு கொள்ளலாம்.

ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்து இன்னும் எண் கிடைக்கப்பெறாதவர்கள், இத்தளத்திற்கு சென்று கேட்கும் விவரங்களைப் பதிவிட்டால் உங்களுக்கான ஆதார் எண் நிலவரம் வந்துவிடும். 1800 300 1947 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

வங்கிக் கணக்கு உங்கள் பெயரில் இருக்க வேண்டும். இதுவரை வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் புதிதாக கணக்கு துவக்கிக்கொள்ள வேண்டும்.

ஆதார் எண், வங்கிக் கணக்கு இரண்டும்  இருப்பவர்கள் இரண்டு படிவங்களை நிரப்ப வேண்டும்.

  • வங்கிக்கு (படிவம் எண் 1) 
  • சிலிண்டர் விநியோகஸ்தருக்கு (படிவம் 2.) 

வங்கிக்கான படிவங்களை வங்கிக் கிளைகளில் அல்லது இந்த தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

படிவம் 2ல் ஆதார் அட்டை நகல் மற்றும் காஸ் சிலிண்டர் வாங்கிய பில்லை இணைத்து விநியோகஸ்தரிடம் அளிக்க வேண்டும். இந்த  படிவத்தை விநியோகஸ்தரிடம் பெறலாம். அல்லது இந்த தளத்திலிருந்தும் பெறலாம்.

கால அவகாசம்
ஆதார் எண் இல்லாதவர்களுக்கு மூன்று மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.

மானியம்
சிலிண்டர் பதிவு செய்து வினியோகிக்கப்பட்ட ஆறு நாட்களுக்குள் நமது வங்கிக் கணக்கிற்கு அப்போதைய சந்தை நிலவரத்தின்படி மானிய விலையை அரசு செலுத்திவிடும். ஆண்டுக்கு 9 சிலிண்டர் மட்டுமே மானியத்தில் பெறலாம்.மேலதிக விவரங்களை இந்த தளத்தில் பெறலாம்.

எப்பொழுது?
இந்தத் திட்டம் முதற்கட்டமாக அக்டோபர் 1 முதல் அரியலூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட இருக்கிறது. பின் படிப்படியாக தமிழகத்தின் 25 மாவட்டங்களில் நான்கு கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டம் தமிழ்நாட்டில் படிப்படியாக கீழ்கண்ட மாவட்டங்களில் அமல் படுத்தப்படுகிறது.

அக்டோபர் 2013 - அரியலூர்
நவம்பர் 2013 - திருச்சி, மதுரை, புதுகோட்டை, நாகப்பட்டினம்.
டிசம்பர் 2013 - கடலூர், பெரம்பலூர், கரூர், சேலம், தர்மபுரி, ஈரோடு.
ஜனவரி 2014 - தஞ்சாவூர், திண்டுக்கல், திருவாரூர், நாமக்கல், வேலூர், இராமநாதபுரம், விழுப்புரம், தேனி, கன்னியாகுமரி,  காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி.

தேதி அறிவிக்கப்படாத மாவட்டங்கள்:
சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கோவை , திருப்பூர், நீலகிரி, விருதுநகர், சிவகங்கை.

தற்பொழுது ஆதார் திட்டம் முழுமை அடையாததால் நீதிமன்ற உத்தரவுப்படி தள்ளி போடப் பட்டுள்ளது. இருந்தாலும் முழுமையாக தெரிவதற்காக பகிர்ந்துள்ளோம். தற்சமயம் ஆதார் இல்லாமலும் வாங்கிக் கொள்ளலாம்.

எம்மிடம் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிகளுக்கு பதிவுகளை உடனே அனுப்பி வருகிறோம். சில மின்னஞ்சல்கள் 'boune' ஆகியுள்ளன. கிடைக்கப் பெறாதவர்கள் ஒரு 'test' மின்னஞ்சலை muthaleedu@gmail.com முகவரிக்கு அனுப்பவும்.

English Summary:
The steps for getting Gas subsidy in Bank account.« முந்தைய கட்டுரைமுதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

No comments:

Post a Comment