Wednesday, October 30, 2013

11% இலாபத்தில் எமது போர்ட்போலியோ

இன்று மங்களகரமாக சென்செக்ஸ் 21000 புள்ளிகளைக் கடந்தது.

அதே வேளை  நமது போர்ட்போலியோவும்  11% லாபத்தில் சென்று கொண்டு இருக்கிறது. 

அதாவது இரண்டு லட்ச ரூபாய் முதலீடு செய்து இருந்தால் இன்று 2,22.000 ரூபாய் அதிகமாக மாறி இருக்கும்.


மின்னஞ்சல் மூலமாக ஆறு நண்பர்கள் எமது போர்ட்போலியோவை பின்பற்றுகிறார்கள் என்பதை அறிந்தோம். அவர்களுக்கும் இதே அளவு லாபம் கிடைத்து இருக்கும் என்று நம்புகிறோம்.

செண்டிமெண்டிற்கு அப்பாற்பட்டு ஏதோ ஒரு விதத்தில் இந்த செயல் இன்று மன நிறைவு தருகிறது.

இது தான் நமது போர்ட்போலியோவின் இறுதி வடிவம்.

மொத்தமாக ஒன்பது பங்குகள் ஒன்பது துறைகளில் பெரிய, சிறிய அளவு நிறுவனங்கள் கலந்து இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் ஏதேனும் பங்கு வருங்காலங்களில் நன்றாக செயல்படாவிட்டால் அதனை எடுத்து விட்டு அதே துறையில் மற்றொரு பங்கை பதிலீடு செய்வோம்.

பெரிதாக தெரிய படத்தினை சொடுக்கவும்.

11% லாபத்தில் போர்ட்போலியோ 

இனி பங்குகளைப் பற்றிய சில குறிப்புகள்:

Mahindra:
மாருதியின் சிறப்பான நிதி நிலை அறிக்கை காரணமாக பங்கு உயர்ந்து வருகிறது. இருந்தாலும் நீண்ட கால அடிப்படையிலே இந்த பங்கில் அதிக லாபம் எதிர் பார்க்கலாம்.

BRITAANIA:
இரண்டு மாதத்தில் 28% லாபம் கொடுத்துள்ளது. நமது இலக்கு இதுவல்ல. அதனால்  இன்னும் பொறுமையாக இருக்கலாம்.

HDFC BANK:
இரண்டு மாதத்தில் 12% லாபம் கொடுத்துள்ளது. காலாண்டு நிதி நிலை அறிக்கை வெளிவந்துள்ளது. ஓரளவு நல்ல நிதி நிலை அறிக்கையாக உள்ளது.

ASTRA:
எதிர்பார்ப்பின் காரணமாக பங்கு 28% லாபம் கொடுத்து உள்ளது..காலாண்டு நிதி நிலை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

FINOLEX:
எதிர்பார்ப்பின் காரணமாக பங்கு 18% லாபம் கொடுத்து உள்ளது. காலாண்டு நிதி நிலை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

ASHAPURA:
காலாண்டு நிதி நிலை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

HCL, AEGIS:
அண்மையில் பரிந்துரை செய்யப்பட பங்குகள். AEGIS ஒற்றை வரியில் தான் பரிந்துரை செய்து இருந்தோம். விரைவில் விரிவான பதிவு எழுதுகிறோம்.


நீண்ட நாட்களாக பங்குச்சந்தை காளையின் பிடியில் இருப்பதால் அடுத்து பங்கு விலைகளில் சில திருத்தங்கள் வரலாம். அப்பொழுது வாங்கிப் போடுங்கள்.

எமது பதிவுகளை எளிதில் பெற விரும்புவோர் வலது பக்கமுள்ள "எம்மைத் தொடர" பகுதியில் ஏதேனும் ஒன்றை தொடரவும். தங்கள் மின்னஞ்சலை பகிர்ந்தால் அதிலும் நமது பதிவுகள் விவரம் அனுப்பப்படும்.

முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way
MATHIPPU.COM
தமிழில் ஆன்லைன் ஷாப்பிங் சலுகைகளின் தொகுப்பு

4 comments:

  1. சூப்பர்..அருமையான செலக்சன்..கலக்குறீங்க.

    ReplyDelete
  2. நன்றி நம்பள்கி அவர்களுக்கு!

    ReplyDelete
  3. நன்றி நண்பர் செங்கோவி!

    ReplyDelete

badge