Tuesday, September 10, 2013

Mutual Fund : ஒரு அறிமுகம்

நாம் எமது ஆரம்ப கால பதிவுகளில் (முதலீடை எப்படி பிரிக்கலாம் ? ) முதலீட்டின் ஒரு பகுதியை "Mutual Fund"ல் முதலீடு செய்யலாம் என்று கூறி இருந்தோம்.

அதன் பிறகு "Mutual Fund" பற்றி எந்த பதிவும் எழுதவில்லை. நிறைய நண்பர்கள் பின்னூட்டங்களில் "Mutual Fund" பற்றி எழுதுமாறு சொல்லி இருந்தார்கள். அவர்களுக்காக இந்த பதிவு.


Mutual Fund என்பதும் பங்குச்சந்தை அல்லது கடன் பத்திரங்கள் சார்ந்த முதலீடு தான். பங்குசந்தையில் அனுபவமில்லாதவர்களுக்கு நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது என்பது கடினமான செயல். அவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது தான் Mutual Fund.

தேர்ச்சி பெற்ற பொருளாதார அறிவுடையவர்களை வைத்து Mutual Fund மேலாண்மை செய்யப்படுகிறது. ஏதேனும் ஒரு பங்கில் மட்டும் முதலீடு செய்யாமல் பல துறைகளை சார்ந்த, சிறிய, பெரிய நிறுவனங்கள் என்று கலந்து முதலீடு செய்வார்கள். அது போல் Mutual Fundன் ஒரு பகுதியினை அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்வார்கள். இவை பொதுவாக "Fixed Return" கொடுக்கும் முதலீடுகள்.


இதனால் முதலீட்டில் ஒரு வித ரிஸ்க் சமநிலை ஏற்படுகிறது. அது நமது முதலீட்டிற்கு பங்குகளை விட ஒரு வித பாதுகாப்பு கொடுக்கிறது. பொதுவாக நிலை வைப்பு(Fixed Deposits) கணக்கை விட Mutual Fundல் அதிக RETURN கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதாவது குறைந்தது 12% மேல் எதிர் பார்க்கலாம். ஆனாலும் சந்தை நிலவரங்களைப் பொறுத்து மாறுபடும்.

Mutual Fund பங்குகளை போன்று SEBI அமைப்பு மூலம் கண்காணிப்பு செய்யப்படுகிறது.

இந்தியாவில் Mutual Fund 1963ல் அரசு துறை சார்ந்த UTI வங்கியால் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு SBI, Canara Bank, Punjab National Bank போன்ற வங்கிகளும் அறிமுகம் செய்தார்கள். 1993 பிறகு Franklin போன்ற தனியார் நிறுவனங்களும் அறிமுகம் செய்தார்கள். இந்தியாவில் தற்போது 43 நிறுவனங்கள் பரஸ்பர நிதி நிருவனங்களை நடத்தி வருகின்றன.
நாம் இந்த வருடங்களை கூறக் காரணம் Mutual Fundல் முதலீடு செய்யும் போது அந்த நிறுவனம் சார்ந்த வரலாறினை(Past History) அறிந்து கொள்வதும் மிக முக்கியம்.

Mutual Fundன் செயல் திறன் Net Asset Value(NAV) என்ற அலகினை பொருத்து அளவிடுவார்கள். இது சந்தையின் ஏற்ற, இறக்கங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

உதாரணத்துக்கு ஒரு பரஸ்பர நிதியின் ஒரு NAV அலகு 50 ரூபாய் என்றால், நாம் 10000 ரூபாய் முதலீடு செய்வதாக கருதிக் கொண்டால் நமக்கு 200 அலகுகள்(Unit) கிடைக்கும்.

சந்தை நிலவரத்தைப் பொறுத்து NAV அலகு 55 ரூபாய்க்கு சென்றால் நமது முதலீட்டின் மதிப்பு 200*55=11000 ரூபாயாக மாறியிருக்கும்.

தொடர்ச்சியான பதிவில் பரஸ்பர நிதி அதன் தன்மையை பொறுத்து எவ்வாறு பிரிக்கப்படுகிறது என்பதனை எழுதுகிறோம்.

தொடர்ச்சியான பதிவினை காண இங்கு அழுத்தவும்,
Mutual Fund: இத்தனை உட்பிரிவுகள்

தொடர்பான பதிவுகள்:
முதலீடை எப்படி பிரிக்கலாம் ?
பங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி? - 1



AROUND THE WEB


முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

1 comment: