இந்தப் பதிவை ஆரம்பிக்கும் முன் எமக்கு பதிவுலகில் ஒரு சிறந்த அறிமுகத்தை தமது பதிவில் கொடுத்த நண்பர் செங்கோவி அவர்களுக்கு எமது நன்றியினைத் தெரிவிக்கிறேன்.
வலது பக்கம் வைத்துள்ள ஓட்டு பெட்டியில் நிறைய நண்பர்கள் பங்கு பரிந்துரைகளில் ஆர்வம் காட்டி இருந்தனர்.நன்றி!
எமது செயல்பாடுகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வது நமக்கிடையே புரிந்துணர்வை மேலும் அதிகரிக்கும் என்பதால் இந்த பதிவை பதிவு செய்கிறோம்.
இது வரை இந்த தளத்தில் மொத்தம் நான்கு பங்குகள் வங்கி, ஆட்டோ, சுரங்கம், நுகர்வோர் என்ற பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக நமது பங்கு பரிந்துரையின் செயல்பாடு கீழ்க்கண்டவாறு இருக்கும்.
இந்த பரிந்துரைகள் எந்த வித லாப நோக்கமின்றி செயல்படும் என்று உறுதி கூறுகிறோம். உங்கள் கடின உழைப்பின் பலனை வீணாக்க விரும்பவில்லை.
பரிந்துரை செய்யப்படும் பங்குகளில் நாமும் முதலீடு செய்திருப்போம். எமது பரிந்துரைகளால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம் நிகழ்ந்து விடாது என்று நம்புகிறோம்.
எமது பதிவுகளில் தினசரி வர்த்தகம் குறித்த பரிந்துரைகள் இடம் பெறாது. இதில் நமக்கு விருப்பம் இல்லை. இரண்டாவது தினசரி வர்த்தகம் குறித்து எமக்கு அனுபவ ரீதியாக அவ்வளவாக தெரியாது. இந்திய சந்தையில் தினசரி வர்த்தகம் செய்வது மிகக் கடினமானது. நமது பிரதமர் வாய் திறந்தால் கூட பங்குச்சந்தை உயரும் என்ற அளவுக்கு உணர்ச்சிகரமான சந்தையாக உள்ளது.
அதனால் நீண்ட கால நோக்கில் குறைந்தது இரண்டு வருட முதலீட்டில் விருப்பமுள்ளவர்கள் பரிந்துரைகளை அனுபவித்து பாருங்கள்:).
இது போக மற்ற பங்குகள் பற்றிய கருத்துகளை விரும்புவர்கள் கருத்துப்பெட்டியில் பதிவு செய்யலாம். எமக்கு தெரிந்தவற்றை கூற முயற்சிக்கிறோம்.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் அவசரத்துக்கு வைத்துள்ள, கடன் வாங்கிய பணத்தை பங்குகளில் முதலீடு செய்ய வேண்டாம்.
சும்மா எழுதலாம் என்று ஆரம்பித்த பதிவினைத் தொடர்ந்து எழுத வேண்டும் என்று தூண்டியது உங்களது ஆதரவே! நன்றி!
வரும் சனியன்று ஒரு புதிய பங்குடன் சந்திப்போம்!
தொடர்புடைய பதிவுகள்:
40 காலாண்டுகளாக 30% லாபம் ஈட்டும் HDFC வங்கி
டிராக்டர் விற்பனையால் மேலே வந்த மகிந்திரா
LOW RISK முதலீட்டர்களுக்கு ஏற்ற BRITANNIA நிறுவனம்
APURA MINECHEM பங்கு: முதலீடு மடங்குகளில் பெருக வாய்ப்பு
English Summary:
How our share recommendations will be?
வலது பக்கம் வைத்துள்ள ஓட்டு பெட்டியில் நிறைய நண்பர்கள் பங்கு பரிந்துரைகளில் ஆர்வம் காட்டி இருந்தனர்.நன்றி!

இது வரை இந்த தளத்தில் மொத்தம் நான்கு பங்குகள் வங்கி, ஆட்டோ, சுரங்கம், நுகர்வோர் என்ற பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக நமது பங்கு பரிந்துரையின் செயல்பாடு கீழ்க்கண்டவாறு இருக்கும்.
- வெவ்வேறு பிரிவுகளில் இருக்கும் 10 பங்குகளை பரிந்துரை செய்து ஒரு போர்ட் போலியோவாக(Portfolio) மாற்றுவது.
- நமது போர்ட் போலியோ மருத்துவம், வங்கி(Bank), மென்பொருள்(Software), பொறியியல், சேவைகள், எரிபொருள்(Energy), சுரங்கம்(Mine), நுகர்வோர்(FMCG), ஆட்டோ போன்ற துறைகளை உள்ளடக்கி இருக்கும். இதில் பெரிய, சிறிய நிறுவனங்கள் கலந்து இருக்கும்.
- அதன் பின் பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் தொடர்பான செய்திகள், நிதி நிலை அறிக்கைகள் போன்றவற்றை பகிர்ந்து கொள்வது.
- அது போல் குறிப்பிட்ட இடைவெளியில்(ஒவ்வொரு காலாண்டும்) நமது போர்ட்போலியோவின் செயல் திறனை பகிர்ந்து கொள்வது.
- ஏதேனும் பங்கு நன்றாக செயல் பட வில்லை என்றால் தேவையான சமயத்தில் விற்பதற்கும் பரிந்துரை செய்வது. அதற்கு பதிலாக மற்றொரு பங்கைப் பரிந்துரைப்பது.
இந்த பரிந்துரைகள் எந்த வித லாப நோக்கமின்றி செயல்படும் என்று உறுதி கூறுகிறோம். உங்கள் கடின உழைப்பின் பலனை வீணாக்க விரும்பவில்லை.
பரிந்துரை செய்யப்படும் பங்குகளில் நாமும் முதலீடு செய்திருப்போம். எமது பரிந்துரைகளால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம் நிகழ்ந்து விடாது என்று நம்புகிறோம்.
எமது பதிவுகளில் தினசரி வர்த்தகம் குறித்த பரிந்துரைகள் இடம் பெறாது. இதில் நமக்கு விருப்பம் இல்லை. இரண்டாவது தினசரி வர்த்தகம் குறித்து எமக்கு அனுபவ ரீதியாக அவ்வளவாக தெரியாது. இந்திய சந்தையில் தினசரி வர்த்தகம் செய்வது மிகக் கடினமானது. நமது பிரதமர் வாய் திறந்தால் கூட பங்குச்சந்தை உயரும் என்ற அளவுக்கு உணர்ச்சிகரமான சந்தையாக உள்ளது.
அதனால் நீண்ட கால நோக்கில் குறைந்தது இரண்டு வருட முதலீட்டில் விருப்பமுள்ளவர்கள் பரிந்துரைகளை அனுபவித்து பாருங்கள்:).
இது போக மற்ற பங்குகள் பற்றிய கருத்துகளை விரும்புவர்கள் கருத்துப்பெட்டியில் பதிவு செய்யலாம். எமக்கு தெரிந்தவற்றை கூற முயற்சிக்கிறோம்.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் அவசரத்துக்கு வைத்துள்ள, கடன் வாங்கிய பணத்தை பங்குகளில் முதலீடு செய்ய வேண்டாம்.
சும்மா எழுதலாம் என்று ஆரம்பித்த பதிவினைத் தொடர்ந்து எழுத வேண்டும் என்று தூண்டியது உங்களது ஆதரவே! நன்றி!
வரும் சனியன்று ஒரு புதிய பங்குடன் சந்திப்போம்!
தொடர்புடைய பதிவுகள்:
40 காலாண்டுகளாக 30% லாபம் ஈட்டும் HDFC வங்கி
டிராக்டர் விற்பனையால் மேலே வந்த மகிந்திரா
LOW RISK முதலீட்டர்களுக்கு ஏற்ற BRITANNIA நிறுவனம்
APURA MINECHEM பங்கு: முதலீடு மடங்குகளில் பெருக வாய்ப்பு
English Summary:
How our share recommendations will be?
can you share your mail id please?
ReplyDeleteShankar
mahashank@gmail.com
Thanks for visiting! Our email id is muthaleedu@gmail.com
DeleteHi Sir, Your email id at the top of the page is with spelling mistake. Kindly change it.
ReplyDeleteRegards,
Mrs.Mahendiran
Mrs.Mahendran,
DeleteThanks for the notification! I have corrected the same.
//இந்தப் பதிவை ஆரம்பிக்கும் முன் எமக்கு பதிவுலகில் ஒரு சிறந்த அறிமுகத்தை தமது பதிவில் கொடுத்த நண்பர் செங்கோவி அவர்களுக்கு எமது நன்றியினைத் தெரிவிக்கிறேன்.//
ReplyDeleteஅது எமது கடமை பாஸ்...போட்ர்போலியோ உருவாக்கும் ஐடியாவை வரவேற்கிறேன்.