Wednesday, July 31, 2013

பங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி? - 1

"எந்த ஒரு முதலீட்டின் லாபம் அதனை வாங்கும் போதே தீர்மானிக்கப்படுகிறது - ராபர்ட் கொயொசகி"


எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அதற்கான சரியான விலையை கொடுத்து வாங்க முற்படுவோம். பொருள்களை வாங்கும் பொது நிறைய கடைகளில் விசாரிப்போம்.நிலம் சம்பந்தப்பட்ட முதலீடுகளை வாங்கும் போது அக்கம் பக்கம் ஒப்பிடுவோம். ஆனால் பங்குகளை வாங்கும் போது  மற்ற பங்குகளின் விலையோடு ஒப்பீட முடியாது. தரகர்கள் சொல் கேட்டு தான் வாங்குகிறவர்கள் அதிகம் உள்ளனர்.



உதாரனத்துக்கு moneycontrol இணைய தளத்தில் சுதர்சன் சுகானி என்பவர் உள்ளார். அந்த அளவுக்கு தவறாக சொல்வார். அவர் கூறும் கருத்தகளுக்கு அடிப்படையே இருக்காது. சும்மா நாளைக்கு கூடும், இன்று குறையும் என்று ஜோதிடம் சொல்வது போல் இருக்கும்.

அதனால் சில எளிய கணக்கீடுகளை நாம் அறிந்து கொண்டால் சரியான விலையில் வாங்குகிறோமா என்றும் தெரிந்து கொள்ளலாம். அதே சமயத்தில் தரகர்கள் சொல்வதையும் சரி பார்த்து கொள்ளலாம்.


பங்குகளில் முதலீடு செய்யும் போது VALUATION, GROWTH என்ற இரண்டு காரணிகளில் அடிப்படையில் முதலீடு செய்வார்கள். VALUATION முறையில் ஒரு நிறுவனத்தின் கடந்த கால வருமானத்தின் அடிப்படையில் தற்போதைய சரியான விலையை நிர்ணயிப்பார்கள். GROWTH முறையில் எதிர்காலத்தில் ஏற்படும் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு முதலீடு செய்வார்கள்.

இந்த பதிவில் VALUATION முறையில் ஒரு பங்கின் விலை எவ்வாறு தீர்மானிக்கபடுகிறது என்று பார்க்கலாம்.

STEPS

STEP #1:
நிறுவனத்தின் கடந்த 5 வருட EPS, பங்கு விலையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு எடுத்து கொள்ளுங்கள். இதிலிருந்து ஒவ்வொரு வருட P/E மதிப்பை கணக்கிடுங்கள்.
EPS = Earning Per Share
MP = Market Price
P/E = Price To Earning Ration = MP/EPS

STEP #2:
EPS வளர்ச்சி விகிதத்தை(EPS-GR) கணக்கிடவும்.
EPS-GR = EPS Growth Rate
EPS-C = தற்போதைய EPS
EPS-B5 = 5 வருடத்துக்கு முன் EPS மதிப்பு
EPS-GR = ( ( EPS-C/ EPS-B5) ^ 0.25) - 1 ) * 100.

STEP #3:
#2லிருந்து 5 வருடத்திற்கு பிறகு எதிர்பார்க்கும் EPS மதிப்பை கணக்கிடவும்.
E-EPS = Estimated EPS
E-EPS = EPS-C * ((1 + EPS-GR) ^ 5)

STEP #4:
#1லிருந்து 5 வருட சராசரி P/E கணக்கிடவும். (Avg P/E)

STEP #5:
5 வருடத்திற்கு பிறகு எதிர்பார்க்கும் பங்கு விலையை கணக்கிடவும்.
EMP-A5 = Expected Market Price After 5 Years
EMP-A5 = Avg P/E * E-EPS

STEP #6:
#4லிருந்து தற்போதைய உண்மையான பங்கு விலையை 8% பணவீக்தை அடிப்படையாக வைத்து கணக்கிடவும்.
R-CMP = Real CMP.
R-CMP = EMP-A5 * (1-0.08)^5


STEP #7:
வாரன் பப்பெட் கூற்றுப்படி 35% பாதுகாப்பு விளிம்பு(Margin Of Safety) என்று வைத்துகொண்டு SMP கணக்கிடவும். இந்த தொகையில் முதலீடு செய்வது பாதுகாப்பானது. இதற்கு கீழ் பங்கு விலை போகும் வாய்ப்பு மிக குறைவு.

SMP (Safety Market Price) = R-CMP*65/100.
இதனை +/-10% என்ற இடைவெளியுடன் எடுத்து கொள்ளவும்.

வெறும் சூத்திரமாக சொல்வதை விட எடுத்துக்காட்டுடன் சொன்னால் எளிதில் புரிந்து விடும். பதிவு பெரிதாகி விட்டதால் அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

தொடர்ச்சியான பதிவு:
பங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி? - 2

இந்த சூத்திரம் கீழே உள்ள வெப் கால்குலேட்டர் மூலம் எளிமைப்படுதப்பட்டுள்ளது.


  • stockcalculation.com

  • பங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர் 

    English Summary:
    The valuation methods for finding the stock price by Price-To-Earning values based on discounted price model. This helps to find the correct price of stocks in share market.



    AROUND THE WEB


    முதலீடைத் தொடர...

    Email: muthaleedu@gmail.com

    மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

    முதலீடு கட்டண சேவை
    பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
    STOCKCALCULATION.COM
    Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

    6 comments:

    1. R-CMP = EMP-A5 * (1+0.08)^5 - Formula might be wrong. Your are calculating the EMP-A5 with growth of inflation rate. I think it should be divide instead of multiply

      ReplyDelete
    2. கவிகுட்டி,

      சுட்டிகாட்டியதற்க்கு நன்றி! தவறுதலாக -க்கு பதிலாக +போடப்பட்டுள்ளது. பதிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

      ReplyDelete
    3. சார்,இந்த பதிவுக்கு எதாவது ஒரு ஸ்கிரிப்ட் உதாரணமாக காட்டினால் புரிந்து கொள்ள எதுவாயிருக்கும்.நன்றி ,

      ReplyDelete
    4. நண்பரே! அடுத்த பதிவைப் பார்க்கவும்..உதாரணத்துடன் விளக்கப்பட்டுள்ளது.

      ReplyDelete
    5. நன்றாக, சுருக்கமாக விளக்கியிருக்கிறீர்கள். நன்றி!பாபு கோதண்டராமன்

      ReplyDelete
    6. STEP #6:
      #4லிருந்து தற்போதைய உண்மையான பங்கு விலையை 8% பணவீக்தை அடிப்படையாக வைத்து கணக்கிடவும்.
      R-CMP = Real CMP.
      R-CMP = EMP-A5 * (1-0.08)^5
      how calculate the 8%

      ReplyDelete